ஜோதிடப் பாடம் – 48 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
ஜன்ம நடத்திரம்:- பூராடம்.
அவள் கணவனின் ஜாதகம்:
ராசி
சிம்ம இலக்கினம்
மிதுனம் : கேது
கடகம் : குரு
கன்னி : சூரியன், சந்திரன்
துலாம் : புதன், சனி, சுக்கிரன்
தனுசு : செவ்வாய், ராகு
ஜென்ம நட்சத்திரம்: உத்திரம் 4 ம்-பாதம்
இவர்களுக்கு நாம் தசப் பொருத்தத்தைப் பார்ப்போம்.
1. தினப் பொருத்தம்:- தினப் பொருத்தம் இருந்தால் அவர்கள் நோய், நொடியின்றி நீண்ட காலம் வாழ்வார்கள். இதில் தினப் பொருத்தம் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் நோய் நொடியின்றி இருக்கின்றார்களா என்றால் அதுதான் இல்லை. அந்தப் பெண் பலவித நோய்களால் பீடிக்கப் பட்டு எப்பொழுதும் தொல்லைதான்.திருமணமாகி சுமார் 25 ஆண்டுகள் ஓடி விட்டன. இந்தப் பெண் பல சமயங்களில் மன நோய்க்கும் ஆளாகிறார். இதை ஜாதக ரீதியாகப் பார்ப்போமேயானால் இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டுக்காரனான குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதைக் காணலாம். உடலாகிய இலக்கினம் 6-ம் வீட்டுக்காரனாகைய குருவால் பாதிக்கப் பட்டு இருக்கிறார். மனமாகிய சந்திரன், சனியின் சேர்க்கையால் பாதிக்கப் பட்டுள்ளார். சந்திரனும் 6-ம் வீட்டிலுள்ள சுக்கிரனின் சாரத்தில் உள்ளார். ஆகவே இந்தப் பெண்ணிற்கு உடல், உள்ளம் சம்மந்தமான நோய் வருகிறது. தினப்பொருத்தம் மட்டும் பார்த்தால் சரியாக வரவில்லை பார்த்தீர்களா !
2. கணப் பொருத்தம்:- இது இருந்தால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும் எனக்கூறப் படுகிறது. இவர்களுக்குக் கணப் பொருத்தம் உள்ளது. ஆனால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைந்துள்ளதா என்றால் அதுதான் இல்லை. தினசரி வாழ்க்கையே போராட்டம்தான். ஆகவே கணப் பொருத்தம் அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 48 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, பொருத்தம், ஜோதிடப், தினப், என்றால், கணப், ஜோதிடம், நோய், ஜோதிடர், நீங்களும், ஆகலாம், பாடம், பாதிக்கப், இந்தப், வாழ்க்கை, ஆகவே, மகிழ்ச்சிகரமான, பட்டு, அதுதான், பாடங்கள், சந்திரன், இருந்தால், நொடியின்றி, இல்லை, இலக்கினம், பெண்