ஜோதிடப் பாடம் – 43 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
அன்று ஞாயிற்றுக் கிழமை. ஆக சூரியன் ஒரு ஆளும் கிரகம். அன்று புனர்ப்பூசம் நட்சத்திரம். மிதுன ராசி. ஆக புதனும் குருவும் ஆளும் கிரகங்கள். அப்போது இலக்கினம் கடக இலக்கினம். பூச நட்சத்திரத்தில் இலக்கினம் சென்று கொண்டிருந்தது.
(நாம் சென்னையில் இருப்பதால் இருக்கும் இடத்திற்கு இலக்கினம் பார்த்தோம்)
ஆக 1 சூரியன், 2.புதன் 3. குரு 4.சந்திரன் 5. சனி ஆகியவை ஆளும் கிரகங்கள்.
அப்போது குரு தசை நடநது கொண்டு இருந்ததினால் குரு திருமணத்தைக் கொடுப்பாரா? எனப் பார்ப்போம். குரு 2-ம் வீட்டில் இருக்கிரார். 2-ம் வீடு திருமணத்தைக் குறி¢க்கும் வீடுகளில் ஒன்றல்லவா?£ ஆக குரு தசையில் திருமணம் நிச்சயம் நடக்கும். அடுத்து புக்தியைப் பார்க்க வேண்டாமா? 11-08-2004 முடிய சனி புக்திநடந்து கொண்டு இருந்தது. ஜாதகத்தில் “புனர்ப்பூ” தோஷம் இருப்பதனால் உடனடியாகத் திருமணத்தை அவரால் கொடுக்க முடியாது. அவர் தாமதப்படுத்தித் தானே கொடுக்க வேண்டும். ஆகவே சனிபுக்தியில் திருமணம் நடக்காது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தோம். ஆக அடுத்த புக்தியான புதனைப் பார்ப்போம். அவர் 7-ம் வீட்டின் அதிபதி. 7-ம் வீடு திருமணத்தைக் கொடுக்கும் வீடல்லவா? தவிரவும் ஆளும் கிரகத்தில் புதனும் இருக்கிறார். ஆக புதன் புக்தியில் திருமணம் நடைபெறும், புதன் புக்தி 12-08-2004-ல் இருந்து 17-11-2006 முடிய நடைபெறுகிறது. இந்த 2 1/4 ஆண்டுகளில் திருமணம் நடக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டே கால் ஆண்டுகளில் திருமணம் நடக்குமென்றால் போதாது. சரி! எந்த அந்திரத்தில் நடக்கும் எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா? சந்திரன் இருக்கும் இடம் 11-ம் வீடு. அவர் 2-ம் வீட்டின் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தில் இருக்கிறார். ஆக சந்திரன் 2, 11-ம் வீடுகளைக் குறிக்கிறார். ஆகவே சந்திரன் அந்தரத்தில் திருமணமாகுமெனக் கூறினோம். அவ்வாறே சந்திரன் அந்திரத்தில் இவருக்குத் திருமணமாயிற்று. அதாவது 05-09-2005 அன்று திருமணம் நடந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 43 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, திருமணம், சந்திரன், ஜோதிடப், குரு, ஆளும், இலக்கினம், ஆகலாம், ஜோதிடம், புதன், ஜோதிடர், திருமணத்தைக், அவர், அன்று, நீங்களும், பாடம், வீடு, கொடுக்க, வேண்டும், அந்திரத்தில், ஆண்டுகளில், இருக்கிறார், வீட்டின், ஆகவே, முடிய, கொண்டு, புதனும், சூரியன், பாடங்கள், கிரகங்கள், அப்போது, நடக்கும், பார்ப்போம், இருக்கும், வேண்டாமா