ஜோதிடப் பாடம் – 43 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்ற பாடத்தில் ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும் எனப் பார்த்தோம். இன்னும் ஒரு உதாரணம் கொடுத்தால் சரியாக இருக்குமென நினைத்தோம். இந்த ஜாதகத்தைப் பாருங்கள்.
ஜாதகர் பிறந்த தேதி : 24-07-1975
பிறந்த நேரம் : 10.30 இரவு
பிறந்த ஊர் : Latitude 10.46 N Longtitude 79.09 E

செவ்வாய் தசை இருப்பு : வருஷம் 6 மாதம் 4 நாள் 18
மேற்கண்ட ஜாதகருக்குத் திருமணம் ஆகவில்லை. நம்மிடம் வந்து திருமணத்திற்கான நேரம் எதுவென்று கேட்டார்கள். நாம் அந்த ஜாதகத்தைப் பற்றி கீழ்வறுமாறு பதில் கூறி இருந்தோம்.
இலக்கினாதிபதி குரு 2-ல் செவ்வாயுடன் இருக்கிறார். 2-ம் வீட்டில் இருப்பதனால் தன் சொந்த முயற்சியில் சம்பாதித்து உயர் நிலக்கு வரக்கூடும். தவிரவும் குருவானவர் செவ்வாயுடன் செவ்வாய் வீட்டில் இருக்கிறார். இதனால் மிக்க சுறுசுறுப்புடன் இயங்கக் கூடியவராக இருப்பார். அதே சமயம் சிறிது முன் கோபியாகவும் இருப்பார்.4-ம் வீட்டின் அதிபதி புதன் 4-ம் வீட்டிலேயே இருப்பதால் நன்கு படித்தவராகவும் இருப்பார். திருமணத்தைப் பற்றிக் கூறும்போது 5-ல் சனி இருப்பதால் திருமணம் தாமதமாகும். ஏன் தாமதமாகும்என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். 5-ம் வீட்டில் இருந்து திருமணத்திற்கான வீடுகளான 2, 7, 11 - ஆகிய வீடுகளைப் பார்ப்பதினால் திருமணம் தாமதமாகும். தவிரவும் சனியும், சந்திரனும் ஒன்றை, ஒன்று பார்ப்பதினால் “புனர்ப்பூ” என்ற தோஷம் ஏற்படுகிறது. இதனால் திருமணம் தாமதப் படுத்தப் படும். உங்களுக்கு விரக்தியையே கொடுத்து விடும் எனக் கூறினோம். அதே போன்று சுமார் 200 க்கும் மேற்பட்ட ஜாதகத்தைப் பார்த்து வெறுப்பு அடைந்த பின்னர் திருமணம் ஆயிற்று.
நம்மிடம் அவர்கள் வந்த தினம் 23-05-2004 காலை 10.30 மணி.
ஆளும் கிரகம் என்னவென்று பாருங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 43 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, திருமணம், ஜோதிடப், பாடம், பிறந்த, வீட்டில், இருப்பார், ஜாதகத்தைப், ஜோதிடம், நீங்களும், ஆகலாம், ஜோதிடர், தவிரவும், இதனால், பார்ப்பதினால், இருப்பதால், தாமதமாகும், நேரம், பாருங்கள், பாடங்கள், செவ்வாய், நம்மிடம், செவ்வாயுடன், திருமணத்திற்கான, இருக்கிறார்