ஜோதிடப் பாடம் – 40 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
தரித்திர யோகம்:- 11-ம் வீட்டு அதிபதி 6 அல்லது 8 அல்லது 12 -ம் வீட்டில் இருந் தால் அதற்குத் தரித்திர யோகமனப் பெயர். இந்த ஜாதகர் கடனாளியாக இருப்பார். ஏழ்மை மிகுந்து இருக்கும். நியாயமற்ற செயல்களைச் செய்யவும் தயங்க மாட்டார்.
சரஸ்வதி யோகம்:- குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் 1, 2, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளில் தனித்தோ அல்லது சேர்ந்தோ இருத்தல்; குருவுக்கு அந்த வீடு சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோஅல்லது நட்பு வீடாகவோ இருத்தல் வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு சரஸ்வதி யோகமெனப் பெயர். இந்த ஜாதகருக்கு சரஸ்வதி கடாஷ்ஷம் இருக்கும். அத்துடன் நல் மனைவியும், நற் புத்திரர்களும் வாய்த்திடுவர்.
சர்ப கண்ட யோகம்:- ராகுவும், மாந்தியும் 2-ன் வீட்டில் இருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. இவர்களுக்கு பாம்புக்கடி ஏற்படக் கூடும்.
உத்தம கிரக யோகம்:- 4-ம் வீட்டின் அதிபதி கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருத்தல்; அத்துடன் சுபகிரகங்கள் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருப்பின் நல்ல வீடு அமையும். 4-ம் வீட்டின் அதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியும் சேர்ந்து செவ்வாயுடனும், சனியுடனும் இருந்தால் பல வீடுகள் இருக்குமெனக் கூறப்படுகிறது.
நாம் மேலே சில யோகங்களைக் குறிப்பிட்டோம். இன்னும் 100-க் கணக்கான யோகங்கள் பற்றி நமது முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அவைகளையெல்லாம் கூற வேண்டுமானால் நாம் அதற்குத் தனிப் புத்தகமே எழுத வேண்டியது இருக்கும். அது சாத்தியமாகாது.
நாம் அடுத்த பாடத்திலிருந்து பலன் எப்படிக் கூறுவது என்று விளக்கப் போகிறோம். அதையும் விளக்கிவிட்டால் நமது பாடங்கள் ஓரளவிற்கு முடிவுக்கு வந்து விடும். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 40 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, அல்லது, ஜோதிடப், யோகம், வீட்டின், நாம், இருத்தல், சரஸ்வதி, ஜோதிடம், நீங்களும், பாடம், ஜோதிடர், ஆகலாம், பாடங்கள், இருக்கும், இருந்தால், நமது, அடுத்த, அத்துடன், அதிபதியும், அதற்குத், அதிபதி, தரித்திர, வீட்டில், பெயர், வீடு, வீடாகவோ