ஜோதிடப் பாடம் – 40 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சச யோகம்:-சனி கேந்திரத்தில் இருந்து அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் இந்த யோகத்தைக் கொடுக்கும். இந்த அமைப்புள்ளவர் களுக்கு நல்ல வேலைக்காரர்கள் அமைவர். மற்றவர்கள் சொத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.
ருசக யோகம்:- செவ்வாய் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருந்து அது கேந்திர ஸ்தானமாக இருந்தால் இந்த யோகம் ஏற்படும். நல்ல உடல்வாகு உள்ளவராக இருப்பார். நல்ல பணவளம் உள்ளவராக இருப்பார். எதிலும் தலைமை தாங்கும் திறமை கொண்டவராக இருப்பார். பத்ர யோகம்:- புதன் கேந்திர ஸ்தானங்களிலிருந்து அது புதனின் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாக இருந்தால் அது பத்ர யோகமெனப் படும்.மிகவும் கெட்டிக் காரத்தனம் உள்ளவராக இருப்பார். சாதுர்யமாக நடந்து கொள்வர். புதன் காரகத்துவம் வகிக்கின்றவைகளெல்லாம் சிறந்து விளங்கும்.
புத-ஆதித்ய யோகம்:- புதனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அதற்கு புத ஆதித்ய யோகமென்று பெயர். மிகவும் கெட்டிக்காரத்தனம் கொண்டவராக இருப்பார். எந்தக் காரியம் செய்தாலும் புத்திசாலித்தனம் அதில் இருக்கும்.
தர்ம, கர்மாதிபதி யோகம்:- 9-ம் வீட்டின் அதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதற்கு தர்ம - கர்மாதிபதி யோகம்என்று பெயர். 9-ம் வீட்டிற்கு தர்ம ஸ்தானமென்றும், 10- ம் வீடிற்கு கர்ம ஸ்தானம் என்றும் பெயரல் லவா? ஆகையால்தான் அதற்கு தர்ம-கர்மாதிபதி யோகமென்று பெயர். இந்த யோகமிருந்தால் நல் வாழ்க்கை அமையும். யோகங்களைக் கொடுக்கும்.
மாலிகா யோகம்:- ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகமென்று பெயர். அதாவது 7 கிர கங்களும் வரிசையாக ஒவ்வொரு வீட்டில் இருக்க வேண்டும். 7 கிரகங்களும் இலக்கினத்திலிருந்து ஆரம்பித்து வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் இலக்கின மாலிகா யோகமெனப் பெயர். வாழ்க்கையில் உயர்ந்த பதவி வகிப்பர். பண வசதி நன்றாக இருக்கும்.
2-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்குத் தன மாலிகா யோகமெனப் பெயர். இந்த யோகமிருந்தால் பண வசதி நன்றாக இருக்கும்.
3-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் விக்கிரம மாலிகா யோகமெனப் பெயர். மிக்க தைரியசாலியாக இருப்பர். தலைமை தாங்கும் குணம் உள்ளவராக இருப்பர்.
4-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் தர்ம சிந்தனை உள்ளவராக இருப்பர். வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பார். இதற்கு சுக மாலிகா யோகமெனப் பெயர்.
5-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் மிகவும் தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பர். புகழ் வாய்ந்தவராகவும் இருப்பர். இதற்குப் புத்திர மாலிகா யோகமெனப் பெயர்.
6-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் பேராசை மிகுந்தவராக இருப்பர். பணத்திற்குக் கஷ்டப் படுபவராகவும் இருப்பார். சத்ரு மாலிகா யோகமென அழைக்கப் படும்.
7-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் அதற்கு களத்திர மாலிகா யோகமெனப் பெயர். பெண்மோகமிருக்கும். பதவிமேலும் மோகமிருக்கும்.
8-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் மிகவும் ஏழ்மையானவராக இருப்பார். மனைவிக்குக் கீழ்ப்படிந்தவராகவும் இருப்பார்.
9-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் பாக்கிய மாலிகா யோகமெனப் பெயர். மிகவும் வசதியான வாழ்க்கை கிடைக்கும். தெய்வ நம்பிக்கை இருக்கும்.
10-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் கர்ம மாலிகா யோகமெனப் பெயர். நல்ல மதிப்புள்ள வாழ்க்கை அமையும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.
11-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் லாப மாலிகா யோகமெனப் பெயர். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
12-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் விரய மாலிகா யோகமெனப் பெயர். வாங்கும் பொருள்களை லாபமான விலைக்கு வாங்குவர். நல்ல விதத்தில் பணத்தை முதலீடு செய்வர்.
இந்த கிரக மாலிகா யோகம் இலக்கினத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஆரம்பித்து முதல் 5-லிருந்து 9-வீட்டுக்குள் முடிய வேண்டுமென்ற கருத்துமுண்டு. முதல் 5-வீட்டிற்குள் முடிந்தால் ஒருவீட்டிற்கு ஒரு கிரகம் என்ற நிலைமை மாறி சில வீடுகளில் 2 கிரகங்கள் கூட இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 40 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, மாலிகா, பெயர், வீட்டிலிருந்து, யோகமெனப், ஆரம்பித்தால், இருப்பார், இருந்தால், யோகம், இருப்பர், தர்ம, இருக்கும், அதற்கு, மிகவும், ஜோதிடப், நல்ல, உள்ளவராக, கொண்டவராக, வரிசையாக, ஆரம்பித்து, யோகமென்று, ஆகலாம், ஜோதிடர், பாடம், வாழ்க்கை, வீடுகளில், கர்மாதிபதி, நீங்களும், ஜோதிடம், அல்லது, உச்ச, சொந்த, வீடாகவோ, தெய்வ, நம்பிக்கை, கிரகங்களும், கிடைக்கும், கிரக, வெற்றி, வசதி, வாழ்க்கையில், எடுத்த, நன்றாக, ஆதித்ய, கேந்திர, தலைமை, தாங்கும், வீட்டிலோ, கொடுக்கும், பாடங்கள், இருந்து, பத்ர, புதன், கர்ம, யோகமிருந்தால், அதிபதியும், வீட்டின், படும், சேர்ந்து, அமையும்