ஜோதிடப் பாடம் – 38 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
புதன். புதன் இங்கு தனியாக இருந்தால் எதாவது சிறிய துக்கங்களுக்காக கவலைப்படுபவராக இருப்பார். புதன் எழுத்துத் துறைகளுக்கும் காரகனல்லவா? ஏதாவது தவறுதலாக எழுதி அதனால் பல பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியவராக இருப்பார்.சனி, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள்பார்வை பெற்றால் பணம் கையாடல், தஸ்தாவேஜுகளைத்திருத்துதல் போன்ற தவறான செய்கைகளில் ஈடுபடுவர். 12-ம் இடம் மறைவுஸ்தானம் எனப்படும் அல்லவா? மறைந்து இருக்கும் உண்மைகளைக் கண்டறியும் திறமை பெற்றிருப்பர். சுறுக்கமாகச் சொல்லப்போனால் C.I.D. போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாகப் பணிபுரிவர்.
அடுத்தது குரு. மிகவும் ஆன்மீக சிந்தனை உள்ள கிரகம். இங்கு தீயவர் சம்மந்தப் படாமல் இருந்தால் சத்சங்கங்களிலோ, அனாதை ஆசிரமங்களிலோ, தர்மத்தைப் பரப்பும் ஸ்தாபனங்களிலோ தங்கள் காலத்தைக் கழிப்பர். ஆன்மீகத்துறையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். தங்கள் விரோதிகளை வெற்றி காண்பர். பெரும் பணம் படைத்தோர் தர்மஸ்தாபனங்களுக்குப் பெறும் பொருளுதவி செய்வர்.
அடுத்த கிரகம் சுக்கிரன். 12-ம் வீட்டை அயன், சயன, போகஸ்தானம் என்று கூறுவார்கள். சுக்கிரன் இங்கு இருப்பது சிற்றின்பத்தில் அதிக நாட்டம் கொடுக்கும். சுபகிரகங்கள் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருப்பவர் வேலி தாண்டிச் செல்ல மாட்டார். செவ்வாய் சேர்ந்திருப்பின் பிற பெண்களிடம் நாட்டம் கொண்டு மனம் செல்கின்றபடியெல்லம் செல்வர். சுக்கிரனும், சனியும் சேர்ந்து இங்கு இருப்பின் மனைவியை விட்டுப் பிரியும் நிலை இவருக்கு உண்டாகும்.
சனி. சிலர் தனிமையை விரும்பலாம். சிலர் தனிமையான இடத்தில் வாழ வேண்டும் என விரும்ம்புவார்கள். சனி 12-ல் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அத்தகைய வாழ்க்கை கிடைக்கும். சனி 6-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு 12-ம் வீட்டில் இருந்தால் மிகவும் நாள்பட்டு குணம் ஆகின்ற வியாதியால் மருத்துவமனையில் அவதிப்படுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 38 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், இங்கு, இருந்தால், ஜோதிடம், புதன், பாடம், ஜோதிடர், நீங்களும், ஆகலாம், தங்கள், சம்மந்தப், சுக்கிரன், நாட்டம், சிலர், கிரகம், இருப்பார், பாடங்கள், செவ்வாய், பணம், இருக்கும், மிகவும்