ஜோதிடப் பாடம் – 38 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
12-ம் வீடு ஒருவருக்கு பயம், தாழ்வு மனப்பான்மையை, சந்தேகம் ஆகியவற்றையெல்லாம் கொடுக்கக் கூடிய வீடு.
அதேபோன்று 12-ம் வீடு என்பது மனித குலத்திற்கு ஒருவர் செய்யும் சேவையையும் குறிக்கும் வீடாகும். தெரெஸா போன்றவர்கள் மனித குலத்திற்குச் செய்யும் சேவையைக் குறிக்கும் வீடு அது. 6-வது வீடு என்பது நாம் செய்யும் அடிமைத் தொழிலைக் குறிப்பது போல், 12-ம் வீடு ஒருவர் தன்னலமில்லாது செய்யும் சேவையைக் குறிக்கிறது. ஆறாம் வீட்டிற்கும் 12-ம் வீடிற்கும் பல ஒற்றுமை, வேற்றுமைகள் உண்டு. 6-ம் வீடு ஒருவர் செய்யும் தொழிலைக் குறித்தால் 12-ம் வீடு ஒருவரின் தன்னலமில்லாத சேவையைக் குறிக்கிறது. 6-ம் வீடு நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளைக் குறித்தால் 12-ம் வீடு காட்டு மிருகங்களைக் குறிக்கிறது. 6-ம் வீடு கடன் வாங்குவதைக் குறித்தால் 12-ம் வீடு கடன் கொடுப்பதைக் குறிக்கிறது. 6-ம் வீடு நம்மோடு கொடுக்கல், வாங்கலில் இருப்போருக்கு நஷ்டத்தைக் கொடுத்தால், 12-ம் வீடு நமக்கு நஷ்டத்தைக் கொடுக்கிறது. 6-ம் வீடு நமக்கு இருக்கும் எதிரிகளைக் குறித்தால் 12-ம் வீடு நமக்கு உள்ள மறைமுகமான எதிரிகளைக் குறிக்கிறது.
இனி 12-ம் வீட்டில் உள்ள கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம். சூரியன் இங்கு இருப்பாரேயாகில் இவர்களின் எதிரிகளுக்கு இவர் எமனாக விளங்குவார். சூரியன் 10-ம் வீட்டுக்கு அதிபதியாகி 12-ம் வீட்டில் இருப்பாரேயாகில் அவருக்கு ஜெயில் சம்மந்தமான உத்தியோகம் கிடைக்கும் என்று கூறலாம். ஏனெனில் 12-ம் வீடு ஜெயிலையும், சூரியன் அரசாங்கத்தையும் குறிக்கிறது அல்லவா! சூரியன் தன்வந்திரி என்று அழைக்கப் படுகிறார் அல்லவா. 12-ம் வீடு மருத்துவமனையைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே மருத்துவ மனையில் மருத்துவராகப் பணிபுரியும் வாய்ப்பும் இருக்கிறது. சரி! சூரியன் 12-ல் இருந்து பாபருடன் கூடியிருந்தாலோ அல்லது பாபரால் பார்க்கப்பட்டாலோ, பெரிய மனிதர்களின் பகை வந்து சேரும். தனிமைப்பட்டு வாழ நேரிடும்.
சரி! அடுத்த கிரகமான சந்திரனைப் பற்றிப் பார்ப்போம். சந்திரன் ஒரு நீர்க் கிரகம். அவர் 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டு 12-ம் வீட்டில் இருப்பாரேயாகில் கடல், கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார். நீர் சம்மநதப் பட்ட தொழில் அமையும்.
பொதுவாக செவ்வாய் இந்த இடத்தில் இருப்பது நல்லது அல்ல; 12-ல் செவ்வாய் இருந்து சனியால் பார்க்கப்பட்டாலோ அல்லது சனியுடன் சேர்ந்து இருந்தாலோ ஒருவருக்கு ஜெயில் தண்டனை கூடக் கிடைக்கலாம். இல்லையென்றால் தீவீரமாக நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாள் இருக்க வேண்டியதுவரும். 12-ம் இடம் மறைமுக எதிரிகளைக் குறிக்கும் இடம்மென்று கூறி இருந்தோம். செவ்வாய் அங்கிருந்து பாபர்களின் சேர்க்கை பெற்றால் எதிரிகள் மூலமாக காயம், ரணம் ஆகியவை ஏற்படும். மிருகளைகளைக் குறிபதும் 12-ம் வீடு என எழுதி இருந்தோம். மிருகங்களின் மூலமாக உடலில் ரணங்கள் ஏற்படக்கூடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 38 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீடு, குறிக்கிறது, ஜோதிடப், சூரியன், செய்யும், குறித்தால், எதிரிகளைக், ஜோதிடர், ஆகலாம், நீங்களும், ஜோதிடம், அல்லவா, சேவையைக், குறிக்கும், இருப்பாரேயாகில், பாடம், வீட்டில், செவ்வாய், நமக்கு, ஒருவர், ஜெயில், அல்லது, மூலமாக, இருந்தோம், பார்க்கப்பட்டாலோ, இருந்து, நஷ்டத்தைக், மனித, என்பது, ஒருவருக்கு, பாடங்கள், நாம், உள்ள, கடன், தொழிலைக், பார்ப்போம்