ஜோதிடப் பாடம் – 29 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
புதன் பத்தாம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கமிஷன் வியாபாரம், ஏஜென்சித் தொழில் ஆகியவற்றில் இருப்பார். புதன் அறிவு கூர்மையைக் குறிக்கும் கிரகம் அல்லவா? புத்திகூர்மையைக் கொண்டுள்ள தொழில்களில் எல்லாம் இவர் சிறந்து விளங்குவார். ஆலோசனைத் தொழில், ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்ரில் இவர் சிறந்து விளங்குவர். புதன் இரட்டைக் கிரகம் அல்லவா? சிலருக்கு இரண்டுவிதமான தொழில் செய்ய முடியும். பொதுவாக புதன் 10-ம் இடத்துடன் சம்மந்தப் பட்டவர்கள் எஜமானராக இருப்பதைவிட ஒருவருக்குக் கீழ் இருப்பதையே விரும்புவார்கள்.
குரு ஒரு சுபக் கிரகம். அவர் 10-ம் வீட்டில் இருந்தால் புகழையும், பதவியையும் கொடுப்பார். அவர் தனகாரகன் அல்லவா? பணம் புழங்குகின்ற இடத்தில் வேலை கிடைக்கக் கூடும். பேங்குகள், கருவூலங்கள், போன்ற பணம் புழங்குகின்ற இடங்களில் வேலை கிடைக்கும். மிகவும் நியாயமான முறையில் சம்பாதிப்பார். குரு வேதாந்தம், மதங்களைக் குறிக்கிறது அல்லவா? இது சம்மந்தமான வேலையும் கிடைக்கும். பொதுவாக குருவானவர் உயர்ந்த பதவியைக் கொடுப்பார். இவருக்குப் பாவரின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மிகச் சாதாரண பதவியிலேயே இருப்பார்.
சுக்கிரன் : கலைக்கு அதிபதியான கிரகம். 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் கலைத் தொழில் சம்மந்தப் பட்ட துறையில் பணிபுரியலாம். வண்டி, வாகனங்களைக் குறிப்பதும் சுக்கிரன்தான். வாகனங்கள் சம்மந்தப்பட்ட துறையிலும் பணிபுரியலாம். சுக்கிரன் பெண்களுக்குக் காரகம் வகிப்பவர். சுபர்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் பெண்களால் அனுகூலம் அடைவர். இரண்டாம் வீட்டுடனும் சம்மந்தப்பட்டால் தேனொழுகப் பேசி காரியத்தை முடிப்பர். அழகு சாதனங்களை குறிப்பவரும் அவரே. ஆக அழகு சாதனங்கள் சம்மந்தப் பட்ட தொழிலிலும் இருப்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 29 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், புதன், சம்மந்தப், அல்லவா, ஜோதிடம், கிரகம், தொழில், பாடம், ஜோதிடர், நீங்களும், ஆகலாம், பார்வையோ, அல்லது, சேர்க்கையோ, சுக்கிரன், கிடைக்கும், பணிபுரியலாம், பட்ட, அழகு, சம்மந்தப்பட்டால், வேலை, சிறந்து, இவர், இருப்பார், வீட்டுடன், பாடங்கள், பொதுவாக, குரு, பணம், கொடுப்பார், அவர், புழங்குகின்ற