ஜோதிடப் பாடம் – 29 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இதுவரை நாம் 9-வீடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இப்போது 10-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். இது மிகவும் முக்கியமான வீடாகும். இது ஒரு கேந்திரஸ்தானம் ஆகும். இதை ஜீவன ஸ்தானம் என்றழைப்பார்கள். ஒருவருக்கு மதிப்பு, கெளரவம் ஆகியவற்றையும் கொடுப்பது இந்த வீடுதானாகும். ஒருவரின் தொழிலைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருடைய பொதுவாழ்வைக் குறிப்பதும் இந்த வீடுதான். (Public Life). ஒருவரின் மதிப்பு, மரியாதை, உலகத்திலுள்ள சுகங்கள், இவைகளையெல்லாம் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் பதவி உயர்வு, வியாபார விருத்தி ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் வீட்டில் சனியிருந்து சுபரால் பார்க்கப்பட்டால் ஒருவரின் வாழ்க்கை உயர்வு மெதுவாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். உயர்வு மெதுவாகத்தான் இருக்கும். சனி சுபரால் பார்க்கப் படாமல் இருந்தால், வலுவில்லாமலும் இருந்தால் மிகச் சாதாரணமான பதவியே வகிப்பர். உயர் நிலைக்கு வருவது கடினம்.
சூரியன் : சூரியன் ஒருவருக்கு நல்லவிதமாக அமைந்துவிட்டால் மதிப்பு, மரியாதை ஆகியனவெல்லம் கிட்டும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். ஏனெனில் அரசாங்கத்தைக் குறிப்பவர் அவர்தான். சூரியன் சம்மநதப் பட்டால் செய்யும் தொழிலில் மரியாதை அல்லது கெளரவம் கிட்டும். சூரியன் மேலதிகாரிகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? அவர்கள் துணையுடன் பதவி உயர்வு பெற்று முன்னேற முடியும். சூரியன் தொழிலில் நிரந்திரத்தைக் கொடுப்பவர். அரசியலுக்கும் இவர் காரகம் வகிப்பதனால் அரசியலில் இவர் முன்னேற முடியும். மற்றவர்கள் இவர்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வார்.
சந்திரன் : பொதுவாக சந்திரனானவர் நிலையில்லாத தன்மை கொண்டவர். அவர் எங்கு இருந்தாலும் மாற்றத்தைக் கொடுப்பார். அதையும் தவிர மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர். நல்ல கிரகங்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மக்கள் தொடர்பு காரணமாக மிகவும் பிரபலமானவராக இருப்பர். பாவர் சேர்க்கை பெற்றிருப்பின் பொதுவாழ்க்கையில் கெட்ட பெயரே வந்து சேரும். வியாபரத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். தொழிலில் இருந்தாலும் வருமானத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டியதுவரும். சந்திரன் சரராசியில் இருந்து 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் தொழில் சம்மந்தமாகப் பிரயாணம் செய்ய வேண்டியது வரும். இதை நீர்க்கிரகம் என்பார்கள். நீர் சம்மந்தப்பட்ட தொழிலைக் கொடுப்பார். சிலர் கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் பணிபுரிவர்.
செவ்வாயானவர் தைரியத்தைக் குறிக்கும் கிரகம். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் தொழில் இருக்கும். தொழிற்சாலைகள், இயந்திரங்கள் போன்றவற்றையும் இவர் குறிப்பதால் இது சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நெருப்புக்கும் இவர் அதிபதியாவதால் நெருப்பு சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நிலம், வீடு போன்ற ஸ்திர சொத்துக்களுக்கும் இவர் அதிபதியாவதால் இது சம்மந்தமான வேலைகளிலும் இந்த ஜாதகர் ஈடுபடுவர். செவ்வாய் நன்கு இருக்கப் பிறந்தவர்கள் வீடு வாங்கி விற்பது போன்ற Real Estate - Business-ல் இருப்பார். செவ்வாய் வலுவற்று இருப்பவர்கள் வீட்டு வீலை செய்யும் தொழிலாளியாக இருப்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 29 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இவர், இருக்கும், ஒருவரின், சூரியன், ஜோதிடப், குறிப்பதும், கொடுப்பார், உயர்வு, தொழிலில், வீடுதான், நீங்களும், ஜோதிடம், மதிப்பு, ஆகலாம், ஜோதிடர், மரியாதை, சம்மந்தமான, பாடம், சந்திரன், பிரயாணம், ஏற்றதாழ்வுகள், மக்கள், இருந்தாலும், இருப்பார், அதிபதியாவதால், வேலையையும், வீடு, செவ்வாய், தொழில், சம்மந்தப்பட்ட, செய்ய, கிட்டும், கெளரவம், தொழிலைக், பதவி, ஒருவருக்கு, மிகவும், பாடங்கள், பார்க்கப், சுபரால், இருந்தால், முன்னேற, முடியும், காரகம், அல்லது, பட்டால், செய்யும், கொடுப்பவர்