ஜோதிடப் பாடம் – 27 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
நீண்டபயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் வெளிநாடு செல்கிறார் என்றால் 9-ம் வீட்டின் தொடர்பு இன்றி அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதாவது 9-ம் வீட்டின் அதிபதி அல்லது 9-ம் வீட்டிலுள்ள கிரகங்களின் தசா, புக்திகளில்தான் ஒருவர் வெளிநாடு செல்ல முடியும். ஒருவர் "உங்களிடம் நான் வெளிநாடு செல்ல முடியுமா?" எனக் கேட்கிறார் எனக் கொள்வோம். இதற்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். வெளி நாடு செல்வது என்றால் என்ன?
1. நாம் இருக்கும் இடத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும்.
2. நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
3. சற்றும் பழகாத முன், பின் தெரியாத இடத்தில் இருக்க வேண்டும். இவைதான் வெளிநாடு செல்லுதலைக் குறிக்கிறது.
நாம் தற்போது இருக்கும் வீட்டை/ நாட்டைக் குறிப்பது 4-ம் வீடு. அந்த வீட்டிற்குப் 12-ம் வீடான 3-ம் வீடு தான் இடம் பெயர்தலைக் குறிக்கிறது.
நீண்ட பயணம் மேற்கொள்ளுவதை 9-ம் வீடு குறிக்கிறது. சற்றும் பழகாத, முன் பின் தெரியாத இடத்திற்குச் செல்வதை 12-ம் வீடு குறிக்கிறது. ஆக 3, 9, 12-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திகாலங்களில்தான் ஒருவர் வெளி நாடு செல்ல முடியும். ஆக 9-ம் வீட்டின் உபயோகம் வெளிநாடு செல்ல எப்படிப் பயன் தருகிறது பார்த்தீர்களா?
சற்றும் முன்பின் தெரியாதவர்களையும் வெளி நாட்டவர்களையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் தனக்கு சொந்தத்தில் திருமணமாகுமா? அல்லது அந்நியத்தில் திருமணமாகுமா? எனக்கேட்கிறார் எனக் கொள்ளுங்கள். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கிறது அல்லவா? 7-ம் வீடும் சந்திரனும் சம்மந்தப் பட்டால் தாயார் வழி உறவில் திருமணமாகுமென்று கூறலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் தகப்பனார் வழி உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். புதன் சம்மந்தப்பட்டால் தாய் மாமன் உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். 9-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டல் அந்நியத்தில் திருமணமாகும் எனக்கூறலாம். ஏன் அந்நிய நாட்டினராகக் கூட இருக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 27 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, செல்ல, வெளிநாடு, குறிக்கிறது, வீடு, ஒருவர், ஜோதிடப், எனக், சற்றும், கூறலாம், உறவில், வேண்டும், வெளி, நாம், நீங்களும், ஆகலாம், ஜோதிடம், வீட்டின், பாடம், ஜோதிடர், பின், தெரியாத, அந்நியத்தில், திருமணமாகுமெனக், சம்மந்தப்பட்டால், முன், திருமணமாகுமா, பாடங்கள், என்றால், ", முடியும், கிரகங்களின், வீடுதான், நாடு, அல்லது, நீண்ட, இருக்கும், பழகாத