ஜோதிடப் பாடம் – 27 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
மிக முக்கியமானவீடான 9-ம் வீட்டைப், பற்றி நாம் இப்போது பார்க்கப் போகிறோம். ஒருவருடைய குருவைப் பற்றிக் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். பொதுவாக இதைப் பிதா ஸ்தானமென்றுதான் கூறுவோம். அதாவது ஒருவரின் தகப்பனாரை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். கிரகங்களில் சூரியனை வைத்து எப்படி தகப்பனாரைக் கூறுகின்றோமோ அதைப் போல் 9-ம் வீட்டை வைத்து தகப்பனாரைப் பற்றிக் கூறவேண்டும். ஒருவருடைய நீண்ட பயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் செய்கின்ற தர்மத்தையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 9-ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் அவர் செய்கின்ற தருமங்கள் எல்லோராலும் போற்றப்படும். பாப கிரகங்கள் இருப்பின் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும். சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்கள் இருந்தால் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும்.
5-ம் வீடும் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றுதான் அழைக்கப் படுகிறது. 9-ம் வீடு போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. ஆக திரிகோண ஸ்தானமான 5-ம் வீடும் 9-ம் வீடும் கெடாமல் இருந்தால் ஒருவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாமல்லவா? அதாவது சுபக் கிரகங்களான குரு, சந்திரன், புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்து அல்லது 9-ம் வீட்டைப் பார்த்தால் அவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாம். அதாவது போன ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்து அதன் விளைவாக இந்த ஜென்மத்தில் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றார் எனக் கூறலாம்.
9-ம்வீடு ஒருவரின் மத நம்பிக்கை, வேதாந்தங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. குருவானவர் வேதாந்தத்தைக் குறிக்கும் கிரகம். 9-ம் வீட்டில் குரு இருந்தால் ஒருவர் மதம், வேதாந்தங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். சனி இருந்தாலும் அவ்வாறே மத சம்மந்தமான விஷயங்களில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். கோவில்கள், சத்சங்கங்கள் மற்றும் தெய்வ தரிசனங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். கல்லூரிக்கு மேற்பட்டப் படிப்பையும் குறிப்பது இந்த வீடுதான். இதில் சுப கிரகங்கள் இருந்து நடப்பு தசா, புக்திகளும் 9-ம் வீட்டைக் குறித்தால் அவர் கல்லூரிப் படிப்பிற்கு மேற்பட்டப் படிப்பைப் படிப்பார் எனக் கொள்ளலாம்.
சட்டப் படிப்பைக் குரிப்பதும் இந்த வீடுதான். (கிரகங்களில் குருவானவர் சட்டப் படிப்பைக் குறிப்பார்.) ஆன்மீக சிந்தனைகள், உபாத்தியாயர் தொழில், புரோஹிதம் தொழில் ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். தேவதைகளை வசியம் செய்தலையும் இந்த வீடுதான் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 27 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீடுதான், ஜோதிடப், வீட்டை, கிரகங்கள், இருந்தால், எனக், ஜென்மத்தில், பாடம், ஒருவர், குறிக்கும், ஆகலாம், நீங்களும், வீடும், நம்பிக்கை, அவர், ஜோதிடம், அதாவது, ஜோதிடர், கூறலாம், வேதாந்தங்கள், கொள்ளலாம், செய்தவர், வீட்டைப், குரு, இருந்து, ஆகியவற்றைக், குருவானவர், சட்டப், படிப்பைக், தொழில், மேற்பட்டப், இருப்பார், பாடங்கள், உள்ளவராக, புண்ணியம், குறிக்கிறது, குறிப்பதும், ஜென்மத்து, செய்கின்ற, வைத்து, கிரகங்களில், வைத்துத்தான், வேண்டும், வீட்டில், வைத்துக், பற்றிக், ஒருவரின், போய்விடும், எடுபடாமல், செய்யும், தர்மம், ஒருவருடைய