ஜோதிடப் பாடம் – 20 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
4-ம் வீட்டதிபதி பாவிகள் சம்மந்தமில்லாமல் கேந்திரஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோனைருந்தால் பந்துக்களை விரும்புபவனாக அந்த ஜாதகன் இருப்பான். 4-க் குடையவன் பாபக் கிரகத்துடன் சேர்ந்தாலும், பாபர்கள் வீட்டிலிருந்தாலும் நீச வீடு, சத்துருக்கள் வீட்டிலிருந்தாலும் பந்துக்களோடு சேர்ந்து இருக்க மாட்டான். 4-ம் வீடு படிப்பு ஸ்தானமல்லவா? 4-ம் வீட்டிற்குடையவனும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும், புதன் உச்ச ராசியில் இருந்தாலும் ஜாதகன் படிப்பு மிகுந்தவனாவான். நாம் ஏற்கனவே கூறிருக்கிறோம், நாலாம் இடம் என்பது கல்லூரிவரையிலான படிப்பு வரையிலும்தான். அதற்கு மேற்பட்ட படிப்பை 9-ம் வீட்டைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். ஒருவர் ஜோதிடராக வேண்டுமென்றால் புதன் கேந்திரஸ்தானங்களுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அதைத் தவிரவும் சுக்கிரன் 2 அல்லது 5 அல்லது 9-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள்தான் ஜோதிடத்தில் வல்லவராக இருக்க முடியும். சரி! ஒருவர் கணிதத்தில் வல்லவராக இருக்க எந்த கிரகம் நன்றாக இருக்க முடியும். கணிதத்திற்கு அதிபதி புதன். அவர் ஜாதகத்தில் கெடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவர் கணிதத்தில் வல்லவராக இருக்க முடியும். சட்டப் படிப்புப் படிக்க எந்த கிரகம் உதவும்? சட்டத்திற்குக் காரகன் குரு. அவர் ஜாதகத்தில் நல்ல விதமாக அமைந்தால்தான் ஒருவர் வழக்கறிஞ்கராக முடியும். இப்போது எல்லோரும் Engineering படிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்கு எந்த கிரகம் உதவி செய்யும்? Engineering படிப்பவர்களுக்குக் கணிதம் மிக முக்கியம். அவர்கள் Drawing, Plan போடுவதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் அதிபதி புதன். இயந்திரங்களுக்கு அதிபதி செவ்வாய். கட்டிடத் தொழிலுக்கு அதிபதி செவ்வாய். புதனும், செவ்வாயும் படிப்பு சம்மந்தமான நாலாம் வீட்டுடனோ அல்லது 9-ம் வீட்டுடனோ சம்மந்தப் பட்டால் ஒருவர் Civil அல்லது Mechanical Engineer ஆக முடியும். Chemical - க்கு அதிபதிசுக்கிரன். அவரும் புதனும் சேர்ந்து ஒருவரை Chemical Engineer -ஆக ஆக்க முடியும். ஆதாவது படிப்பு ஸ்தானத்துடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் அவர் Chemical Engineer ஆக முடியும். சந்திரன் நீருக்கு அதிபதியல்லவா? அவரும் புதனும் Textile Engineer களை உருவாக்க முடியும். பூமியிலுள்ள கனி வளங்களைக் குறிப்பது சனி. பூமியைக் குறிப்பது செவ்வாய். சனி-செவ்வாய்-புதன் - இந்தச் சேர்க்கை Mines Engineer-ஐக் குறிக்கிறது.
சரி! மருத்துவராக எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும். சூரியனுக்குப் பெயர் தன்வந்திரி. அவர் படிப்பு ஸ்தானத்துடன் சமமந்தப் பட்டால்தான் ஒருவர் மருத்துவராக முடியும். இப்போது எந்தெந்த கிரக சேர்க்கை பெற்றால் ஒருவர் என்ன படிக்க முடியும் என்று தெரிந்து கொண்டீர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 20 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருக்க, முடியும், வேண்டும், படிப்பு, ஒருவர், engineer, புதன், ஜோதிடப், அவர், செவ்வாய், எந்த, அதிபதி, அல்லது, சம்மந்தப், வல்லவராக, புதனும், கிரகம், படிக்க, chemical, ஆகலாம், ஜோதிடர், நீங்களும், பாடம், ஜோதிடம், சேர்க்கை, சேர்ந்து, அவரும், ஸ்தானத்துடன், குறிப்பது, வீட்டுடனோ, மருத்துவராக, engineering, அவ்வாறு, வீடு, வீட்டிலிருந்தாலும், ஜாதகன், பாடங்கள், நாலாம், அதற்கு, ஜாதகத்தில், கணிதத்தில், பட்டு, இப்போது