ஜோதிடப் பாடம் – 20 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
4-ம் வீட்டு அதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபருடனோ சேர்ந்து இருப்பாரேயாகில் அவருக்கு சகோதரன் மூலமாக ஸ்திர சொத்துக்கள் கிடைக்கும். அதேபோல இலக்கினாதிபதி பலம் பெற்று 4-ம் இடத்திலும், 4-ம் வீட்ட்டதிபர் பலம் பெற்று இலக்கினத்திலும் இருந்தால் அவர் சுய முயற்சியில் வீடு கட்டுவர். சிலருக்கு மனைவி மூலமாக வீடு கிடைக்கிறது அல்லவா? அதற்கு எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்? களத்திர காரகனான சுக்கிரன் 4-ம் இடத்திலும், 4-க்குடையவன் 7-ம் இடத்திலும் இருப்பார்களேயானால் களத்திரம் மூலம் வீட்டு லாபம் உண்டாகும். சத்துருக்கள் மூலம் எப்படி பூமி லாபமுண்டாகுமெனப் பார்ப்போம். 6-ம் இடம் சத்துரு ஸ்தானம் அல்லவா? 6-ம் வீட்டதிபன் 4-ம் வீட்டிலோ அல்லது நாலாம் வீட்டதிபன் 6-ம் வீட்டிலோ இருந்து 4-ம் வீட்டதிபன் 6-ம் வீட்டதிபனை விட பலம் பொருந்தி இருந்தால் அவருக்கு விரோதிகளிடமிருந்து பூமிலாபம் கிடைக்கும்.
ஒருவருக்கு மாடி வீடு எப்படிக் கிடைக்குமெனப் பார்ப்போம்? நவாம்ச இலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இவர்களிருந்தால் மாடி வீடு கட்டுவர். அல்லது நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் உச்சமடைந்த கிரகமிருக்குமேயகில் அவருக்கும் மாடி வீட்டு யோகம் உண்டு. நாம் இதுவரையில் வீட்டு யோகத்திப் பற்றிப் பார்த்தோம். காரகத்துவங்களையும் இனிப் பார்ப்போம். தாயாரைக் குறிப்பதும் 4ம் வீடு அல்லவா? 4-ம் வீட்டிற்கதிபதி இலக்கினாதிபதியினால் பார்க்கப் பட்டு கேந்திரத்தில் இருந்தாலும், அல்லது சுபகிரகங்களினால் பார்க்கப் பட்டு இருந்தாலும் தாயரிடத்தில் மிக்க அன்புடன் இருப்பர். மாதுர்காரகனான சந்திரன் இரண்டு பாப கிரகங்களின் நடுவில் இருந்தால் அல்லது சேர்ந்து இருந்தால் மாதாவிற்குக் கெடுதல் உண்டாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 20 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருந்தால், வீடு, வீட்டு, ஜோதிடப், ஸ்திர, அல்லது, பொருள், என்றால், ராசியில், வீட்டதிபன், பார்ப்போம், மூலமாக, வீட்டில், பலம், மாடி, அல்லவா, வீட்டிலோ, இடத்திலும், எனக், ஆகலாம், ஆகியவை, நவாம்ச, ராசி, ஜோதிடம், ஜோதிடர், பாடம், ராசிகளாகும், நீங்களும், இருப்பது, கிடைக்கும், இருந்தாலும், பெற்று, பார்க்கப், சந்திரன், இலக்கினத்திற்கு, அவருக்கு, உண்டாகும், மூலம், பட்டு, சுக்கிரன், கட்டுவர், இடம், பயன்படுகின்றன, ஒருவருக்கு, அந்த, பலன், எனப், பாடங்கள், இருக்கிறது, நாம், நோய், வரக், அவர், வசிப்பர், கொள்ளலாம், அதிபர், இருந்து, கூடும், இருக்கும், சேர்ந்து