ஜோதிடப் பாடம் – 19 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சனியானவர் எதையும் ஒளித்து வைக்கும், மறைத்து வைக்கும் குணம் கொண்டவர். அவர் தனஸ்தானத்தையோ அல்லது ஜீவனஸ்தானத்தையோ குறிப்பவராகி 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்து இருப்பர் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினக் காரரான ஒருவருக்கு சனியானவர் 10-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் கடகத்தில் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். 4-ம் வீட்டில் இல்லாமல் பார்த்தாலும் அதே பலன்தான். காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார். 4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.
நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
முதல் வீட்டில் : மிகுந்த படித்தவராக இருப்பர்.
இரண்டாம் வீட்டில் : தாய் வழிச்சொத்து இவருக்குக் கிடைக்கும். கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பார்.
மூன்றாம் வீட்டில் : நான்காம் வீட்டு அதிபதி 3-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல; நான்காம் வீடு குறிக்கின்ற காரகத்துவங்களெல்லாம் சரியாக இருக்காது.
நான்காம் வீட்டில் : தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பார்.
5-ம் வீட்டில் : இவருடைய தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பார். மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பார்.
6-ம் வீட்டில் : முன்கோபியானவர். நல்ல எண்ணங்கள் இல்லாதவர்.
7-ம் வீட்டில் : வீடு, வாசலுடன் இருப்பவர். 7-ம் வீடு சராசியாக இருந்தால் வெளியூரிலும், ஸ்திர ராசியாக இருந்தால் உள்ளுரிலும் சம்பாத்தியம் செய்வர்.
8-ம் வீட்டில் : இது துஸ்தானம் அல்லவா? மறைவிடமும் ஆகும். செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம்.
9-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் மன நிறைவு உண்டாகும். தகப்பனாராலும் அனுகூலம்.
10-ம் வீட்டில் : அரசியலில் புகழ் பெறுவர். பலர் மதிக்கும் வண்ணம் வாழ்வர்.
11-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம். தாயாரால் அனுகூலம்.
12-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் துன்பம். இளம் வயதிலேயே தாயார் மரணம்.
இப்போது 4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 19 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீட்டில், ஜோதிடப், இருப்பார், ஸ்திர, வீடு, நான்காம், இருந்தால், அந்த, தாயார், அதிபதி, ஜோதிடர், நீங்களும், பாடம், ஆகலாம், ஜோதிடம், வீட்டு, என்ன, பார்ப்போம், அனுகூலம், சொத்துக்களால், உள்ளவராக, பாடங்கள், பலன், சந்திரனும், இருப்பர், பணம், கறுப்புப், ஜாதகர், எனக், வீட்டிற்கும், கிடைக்கும், சனியானவர், கூடிய, வைக்கும், அவர்