ஜோதிடப் பாடம் – 19 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இந்தப் பாடத்தில் நாம் 4-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். நாலாம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம். வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம். சரி! எப்படி கூறுவது? செவ்வாயானவர் ஸ்த்ர சொத்துக்களுக்கு அதிபதி அல்லவா? அவர் 4-ம் வீட்டில் இருந் தாலோ அல்லது 4-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்கயோகம் உண்டு என்று கூறலாம்.
4-ம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் என்ன கிடைக்கும்? சுக்கிரன் வாகனகாரகன் அல்லவா? அவர்களுக்கு வாகனம் கிட்டும். வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ளகாராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம்; எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு. படிப்பை பற்றிக் கூற வேண்டுமானால் 4-ம் வீட்டுடன் புதன் சம்மந்தப்பட்டுள்ளாரா? எனப்பார்ப்பது அவசியம். புதன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவர் ஒரு பட்டப்படிப்பு முடியப் படிப்பார் எனக் கொள்ளலாம். 4-ம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது. அதற்கு மேலுள்ள படிப்பை 9-ம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.
சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார். சுக்கிரன் கலைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார். சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எறிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை. 4-ம் வீடு மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் சொத்துக்களைக் குறிக்கிறது. ஒருவருக்குப் புதையல் கிடக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 19 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, அல்லது, அவர், சேர்ந்து, ஜோதிடப், குறிக்கிறது, வீட்டை, புதன், சூரியனுடன், அல்லவா, வீடு, சுக்கிரன், கிரகம், வைத்துக், பாடம், ஆகலாம், நீங்களும், ஜோதிடம், இருந்தால், ஜோதிடர், கூறலாம், எனக், சூரியனும், இருப்பார், சூரியனால், காரகம், காரகத்துவம், கிரகத்தின், வகிப்பவர், அந்த, பார்த்தாலோ, ஸ்திர, எப்படி, ஒருவருக்கு, வீட்டைப், பாடங்கள், வீட்டில், உண்டு, இருக்கலாம், வாகனம், அவர்களுக்கு, வீட்டுடன், படிப்பை