ஜோதிடப் பாடம் – 14 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
கடகஇலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாயானவர், 5-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதி. அதாவது கோண, கேந்திர வீடுகளுக்கு அதிபதி. 5-ம் வீடு திரிகோணஸ்தானம், 10-ம் வீடு கேந்திரஸ்தானம் அல்லவா! ஆகவே செவ்வாயானவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகன் என்றழைக்கப் படுகிறார். அதேபோல் செவ்வாயானவர் சிம்மஇலக்கினத்திற்கும் 4-ம் மற்றும் 9-ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார். கேந்திர, கோண வீடுகளுக்கு அதிபதியாவதால் அவர் சிம்ம இலக்கினத்துக்கும் யோக காரகனாகிறார். அதே போல் மகர, கும்ப இலக்கினங்களுக்கு சுக்கிரனானவர், கேந்தரஸ்தானத்திற்கும், திரிகோணஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் அவர் இந்த இரண்டு இலக்கினங்களுக்கும் யோககாரகனாகிறார். ரிஷப இலக்கினத்திற்கு சனியானவர் 9-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். துலாஇலக்கினத்திற்கும் சனியானவர் 4-ம் வீட்டிற்கும், 5-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். இந்த யோக காரகர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். அதேபோன்று 2, 6, 8, 11-ம் வீடுகள் பணபரம் என்றும், 3, 12 வீடுகள் ஆபோக்லிபம் என்றழைக்கப்படும். இந்த வீடுகளைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். சரி!இப்போது நாம் விட்ட இடத்திலிருந்து முதலாம் வீட்டிற்கு வருவோம்.
இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவை ஒருவரின் ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆயுளைக் கணிக்க இந்த மூன்று வீடுகளையும் ஆராய வேண்டும். ஒருவரின் ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள் எனப்படும். 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் எனப்படும். 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் எனப்படும். சரி! ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது? இது மிகவும் கடினமான வேலை. ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.
1. இலக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.
2. 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.
3. இலக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.
4. இலக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.
5. இலக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
6. எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது இலக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்
7. சந்திரனும், இலக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.
8. குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.
இதைப் போல் பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நாம் கூறியுள்ளோம். நமது வாசகர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் பார்த்தால் ஆயுளைப் பற்றி விரிவாகக் கூறி இருப்பது தெரிய வரும்.
கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.
1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
2. இலக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
3. இலக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,
6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
4. பொதுவாக இலக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள்
இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 14 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீடு, அல்லது, இருத்தல், வீட்டில், அந்த, வீட்டிற்கும், வீட்டின், ஜோதிடப், இருந்தாலும், சேர்ந்து, ஆயுளைக், வீட்டிற்கு, அதாவது, அவர், ஒருவரின், அதிபதி, அதிபதியாவதால், என்றழைக்கப்படும், அங்கு, எனப்படும், புத்திர, இருக்கிறார், வீடுகளுக்கு, எந்த, இருக்கும், இலக்கினம், ஜோதிடர், ஜோதிடம், ஆகலாம், யோககாரகனாகிறார், செவ்வாயானவர், எனக்கொள்ளுங்கள், சுபர், இருந்தால், வீட்டிலோ, அற்ப, சந்திரனும், வீடுகள், பார்வை, காரகத்துவம், பாடம், நீங்களும், மூன்றாம், நாம், இருந்து, எட்டாம், சனியானவர், போல், இலக்கினத்தில், நமது, மிகவும், கிரக, காட்டுகின்றன, இலக்கினாதிபதியும், ஆயுள், வீடுகளில், பார்த்தல், வீட்டையோ, ஆயுள்தான், நன்றாக, அவைகள், இருப்பார்களேயானால், கெட்ட, கெடுத்து, ஜாதகத்தில், விடுகின்றன, தங்கி, கிரகங்கள், அதேபோல், ஆகியவை, திரிகோண, நல்ல, அழைக்கப், உதாரணமாக, ஒருவருக்கு, என்பது, தர்ம, சேர்க்கை, 10ம், கேந்திர, யோகம், சுக்கிரனானவர், குறிக்கிறது, திரிகோணஸ்தானம், அவருக்குப், பாக்கியம், பாடங்கள், இலக்கினத்திற்கு