ஜோதிடப் பாடம் – 11 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
6-ம் வீட்டில் ல்க்கினாதிபதி இருந்தால் ஜாதகன் வியாதி உடையவனாக இருப்பார். அவருக்கு விரோதிகள், சத்துருக்கள், அவதூறு பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள். கடனுபாதைகள் நிறைந்தவரும், மனம் அமைதியற்றவனாகவும் இருப்பான். 6-ம் வீடு மறைவு ஸ்தானம் என்றும் துஸ்தானம் என்றும் அழைக்கப் படும். இந்த வீட்டில் இலக்கினதிபதி இருப்பது நல்லது அல்ல. 7-ம் வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் ஸ்திரீ லோலனாகவும், ஆசைகள் உடையனவராகவும் இருப்பார். பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார். சிலருக்கு மனைவி மூலமாய் சொத்துக்கள் சேரும். நாம் கீழே ஜாதகம் No.3-ஐக் கொடுத்துள்ளோம்.

இவர் எந்த வேலையையும் பொறுப்புடன் செய்தது இல்லை. ஸ்திரி லோலனாக இருந்து இருக்கின்றார். எப்போதும் வெளியில் சுற்றுபவராக இருந்தார். இவருக்கு இலக்கினாதிபதி 7-ல்; நாம் மேலே கூறியவையெல்லாம் இவருக்குப் பொருந்தி இருக்கிறது. இலக்கினாதிபதி 8-ல் இருந்தால் ஆயுள் நிறைந்தவராக இருப்பார். ஆனால் சிரமத்துடன் குடுப்பத்தை நடத்துவராக இருப்பார். வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார். சிலர் உடலில் தேவையான ஊட்டமைன்றி இருப்பர். 8-ம் இடம் மறைவு ஸ்தானம் என்று கூறுவார்கள். பொதுவாக 8-ல் இலக்கினாதிபதி இருப்பது விரும்பத்தக்கது அல்ல; 9-ம் இடத்தில் இலக்கினாதிபதி இருந்தால் தகப்பனாரின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராக இருப்பார். அதேபோல் பித்துருக்களின் அன்பைப் பெற்றவருமாய் இருப்பார். சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் இருப்பார். இலக்கினத்திற்குப் 10-வது வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பார். அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் உள்ளவர். பந்துக்களிடமும் உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பார். 10-ம் இடத்தில் இலக்கினாதிபதி இருப்பது மிக நல்லது. 11-ம் வீட்டில் இருந்தால் லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பார். இவருக்கு மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும். வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார். 12-ம் வீட்டில் இருந்தால் எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். சிலர் அடிக்கடி இட மாற்றம் செய்வர். அலைச்சல் அதிகமாக இருக்கும். சோம்பேரி எனவும் திறமையற்றவர் எனவும் மற்றவர்களால் அழைக்கப்படுவர். சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வந்து சேரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 11 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருப்பார், இருந்தால், இலக்கினாதிபதி, வீட்டில், ஜோதிடப், இருப்பது, இருக்கும், ஜோதிடம், ஜோதிடர், ஆகலாம், நீங்களும், பாடம், இடத்தில், இவருக்கு, சிலர், நடப்பவராகவும், செய்பவராகவும், எனவும், இவர், உள்ளவராகவும், உடையவராகவும், நல்லது, ஸ்தானம், மறைவு, அதிகமாக, பாடங்கள், என்றும், அல்ல, சேரும், வெளியில், பொறுப்பை, நாம்