ஜோதிடப் பாடம் – 11 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தைப் பார்த்தோம். அத்துடன் 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம். நாம் இந்தப் பாடத்திலிருந்து பலன் சொல்வதைப் பார்ப்போம். முதல் வீடான இலக்கினத்தைப் பார்ப்போம். முதல் வீட்டின் பலனை அதன் அதிபதியை வைத்தும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூற வேண்டும். இந்த ஜாதகம் No. 1 -ஐப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தில் இலக்கினாதிபதியான குரு 11-ம் வீட்டில் இருக்கிறார். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம். இலக்கினாதிபதி 11-ம் வீட்டில் இருப்பது அவர் வாழ்வில் பெறப்போகும் உயர்வைக் காட்டுகிறது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர் வெளிநாட்டில் வாழ்கிறார். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்கிறார். இலக்கினத்தில் புதன் இருக்கிறார். புதன் ஒருவருக்கு அறிவு கூர்மையைக் கொடுக்கும் கிரகமல்லவா ? புதன் இருப்பதால் அவர் Phd வரைப் படித்து இருக்கிறார். இலக்கினத்திலுள்ள புதன் இவருக்கு நல்ல அறிவைக் கொடுத்து இருக்கிறார். இந்த 2-ம் எண் உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். இலக்கினாதிபதி 3-ம் வீட்டில் இருக்கிறார். 3-ம் வீடு உபஜெயஸ்தானம் என்றழைக்கப் படும். 3-ம் வீட்டில் குரு இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையாய் வாழ்வர். இலக்கினத்தில் செவ்வாய் இருந்தால் தலையில் காயம் ஏற்பட்டு அதனால் வடு உண்டாகும். இலக்கினம் என்பது தலையைக் குறிக்கிறது அல்லவா? அதேபோல் செவ்வாய் ரணம், காயங்களை எல்லாம் கொடுப்பவர் அல்லவா? அதேபோல் இவருக்கும் தலையில் காயம் பட்டு வடு உண்டாகி இருக்கிறது.

நாம் பல ஜாதகங்களை அதாவது இலக்கினத்தில் செவ்வாய் உள்ள ஜாதகங்களைப் பார்த்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை கூறுகின்றனர். ஒருவர் Motor Cycle-ல் சென்று கொண்டு இருந்தார். அவருக்கு முன்னால் சென்ற லாரி மண்ணுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அடித்த காற்றில் மணல் பறந்து வந்து கண்ணில் விழுந்ததாம். அவர் நிலை தடுமாறி கீழேவிழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாம். அடுத்தவர் ஒரு பெண்மணி. அவர் மாடியில் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். அவரின் குழந்தை படியில் இறங்கச் சென்றது. குழந்தையைப் பிடிக்கச்சென்ற இவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். தலையில் காயம். வடு ஏற்பட்டு இருக்கிறார். அடுத்தவர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். Fan கழன்று தலையில் விழ பெரிய அளவில் காயம் பட்டு இருக்கிறது. ஆக செவ்வாய் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் ஒருவருக்கு தலையில் அடிபட்டுக் காயம் ஏற்படும். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் இதே போல் ஜாதகங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இலக்கினாதிபதி இலக்கினத்தில் இருந்தால் அவர் ஆட்சியில் இருக்கிறார் எனப் பொருள். அதாவது அது அவருக்குச் சொந்த வீடு அல்லவா? நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர். 2-ம் வீட்டில் இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் இருப்பர். 2-ம் இடம் வாக்குஸ்தானம் அல்லவா ? சுய சம்பாத்தியம் உள்ளவர். குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர். 3-ம் வீட்டில் இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் கூடி வாழ்பவனாகவும், நல்ல தைரியசாலியாகவும் இருப்பர். 3-ம் வீடு இளைய சகோதரத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது அல்லவா? அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது. 4-ம் வீட்டில் இருந்தால் தாயிடம் மிக்க அன்பு உள்ளவராகவும், குடும்பத்தில் ஈடுபடு உள்ளவராகவும், பந்துக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருப்பான். கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், தாய் வழி மாமன்கள் ஆதரவைப் பெற்றவராகவும், சொத்துக்கள் இருப்பவராகவும் இருப்பர்.
5-ம் வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் புத்திர சந்தானங்களைப் பெற்றவராகவும் அவர்களால் சாந்தோஷத்தையும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார். தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், மகான்களின் சத்சங்கத்துடனும நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 11 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருந்தால், வீட்டில், இருக்கிறார், தலையில், நல்ல, காயம், இருப்பர், இலக்கினாதிபதி, வீடு, அவர், இலக்கினத்தில், அல்லவா, ஜோதிடப், நீங்களும், பெற்றவராகவும், செவ்வாய், புதன், குறிக்கிறது, பாடம், ஜோதிடர், தெரிந்து, பார்த்தோம், ஜோதிடம், ஆகலாம், கொண்டு, பலன், கொள்ளுங்கள், உடையவராகவும், வைத்தும், சென்று, அதாவது, ஜாதகங்களைப், அடுத்தவர், ஆதரவைப், இருப்பார், உள்ளவராகவும், இருக்கிறது, நிலை, தடுமாறி, இருந்தார், ஒருவருக்கு, கிரகங்களை, பாருங்கள், ஜாதகத்தில், பார்ப்போம், நாம், பாடங்கள், சென்ற, குரு, என்பது, சகோதரிகளுடன், ஏற்பட்டு, அதேபோல், சகோதர, உள்ள, குடும்பத்தில், இவர், பட்டு