தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழ் நவீன நாடகங்களில், பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. மேலைநாடுகளில் 1990க்கும் முன்பிருந்தே பெண்ணியம் சார்ந்த குழுக்கள், நாடக மன்றங்களை உருவாக்கி கதையாக்கம், நடிப்பு, இயக்கம் என்ற துறைகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான நாடகங்களை நடத்தியுள்ளன. (Spider woman theatre, Circle of the witch, Omalga magic theatre. Women's Experimental theatre போன்றவை) ஆயின் தமிழ் நவீன நாடகங்களில் நடித்தல் தவிர, பெண்ணிய நோக்கில் நாடகக் குழுக்களை அமைத்துக் கருத்துப் பரப்புதல் தமிழகத்தில் நிகழவில்லை. சென்னையில் உள்ள 'பூமிகா' பெண்ணிய நோக்கில் உருவான நாடகக்குழு என்று அறியப்படுகிறது. அதன் செயல்பாடுகளே அதன் திறத்தை உணர்த்தும்.
சமூக வளர்ப்பினால் பழக்கங்களும் பண்புகளும் வரையறுக்கப்படுகின்றனவே தவிர, இயற்கை நியதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மனோபாவங்களில் வேறுபாடுகள் இருக்கவே முடியாது. ஆயின் ஆண்நியதி, பெண்நியதி என்று பிரித்துப்பார்த்துக் கொண்டிருக்கும் நம் சமூகத்தின் கலைகள் இன்னுமே இந்தப் பார்வையை ஒட்டித்தான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்தங்கிய நிலை மாற, ஏனைய கலைகளுடன் இணைந்து, தமிழ் நவீன நாடகத்தின் கருத்துநிலைப் பணி பெண்ணியம் தொடர்பாக மேலும் வலுப்பெற வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நவீன, தமிழ், நாடகக், கலைகள், தவிர, theatre, நாடகங்களில், ஆயின், கட்டுரைகள், நாடகங்களும், பெண்ணியமும், கலைக், பெண்ணியம், சமூக, நோக்கில், இந்தப், பெண்ணிய, வேறுபாடுகள், arts, drama, தமிழ்ப்பெண்களின், சமூகத்தின், பெண்நிலை, ரீதியாகவோ, இருக்கிறது