நாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள்
நாடகத் தமிழ்
திரு.பி.சம்பந்த முதலியார், B.A., B.L.
நமது தாய்மொழியாகிய தமிழ்மொழி தொன்று தொட்டு முத்தமிழ் என வழங்கப்பட்டு வருகிறது; இயல், இசை, நாடகம் எனும் மூன்று பிரிவு உடைமையால் முத்தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று. நாடகத் தமிழ் என்று ஒரு பிரிவு தமிழ் மொழியில் இருப்பதுபோல், உலகிலுள்ள மற்றெந்த மொழிகளிலும் நாடகப் பிரிவு என்பது இல்லை. ஆகவே, நாடகத் தமிழ் என்பது தமிழ்மொழி ஒன்றிற்கே உரிய சிறந்த செல்வமாகும்.
தமிழ் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரியமொழி ஆனது முதல் நாடகத்தமிழ் உண்டாயிருக்க வேண்டுமென்று நாம் ஒருவாறு ஊகிக்கலாம். தமிழில் மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதாம். அந்நூல் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டது என்பதை மொழி ஆய்வு அறிஞர் ஒப்புக்கொள்கின்றனர். அந்நூலில் ஒரு சூத்திரத்தில் "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்" என்கிற சொற்றொடர் வருகிறது. ஆகையால், அக்காலத்திலேயே தமிழ் நாடகம் இருந்திருக்க வேண்டுமென்று நாம் உறுதியாய்க் கூறலாம்.
அப்படி இருந்தும் அக்காலத்தில் எழுதப்பட்ட நாடகம் ஒன்றும் நமக்குக் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தையும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் காலஞ்சென்ற மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தமிழ் உலகிற்கு அச்சிட்டு வெளியிடாவிட்டால், தமிழ் நாடகங்கள் அக்காலத்தில் இருந்தனவோ என்று ஐயப்பட்டிருப்போம். மேற்கண்ட நூல்களில் நமக்குக் கிடைத்துள்ள சில விவரங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன்:
சம்பந்த முதலியார் |
நாடக மேடைகள் எந்தெந்த இடங்களில் ஏற்படுத்தவேண்டும், அவைகளின் உயரம், அகலம், நீளம் எவ்வாறு இருக்கவேண்டும், அவைகளின்மீது தூண்கள் எப்படி நாட்டப்பட்டிருக்கவேண்டும், திரைச்சீலைகள் எப்படி எப்படிக் கட்டப்படவேண்டுமென்பன போன்ற விவரங்களும், நாடகம் ஆடுபவர்களுக்கு இன்ன இடம், நாடகத்தைப் பார்க்க வரும் அரசர் முதலிய பெரியோர் உட்கார இன்னவிடம், மற்றும் சாதாரண மக்கள் உட்கார இன்னவிடம் என்பன போன்ற விவரங்களும் அந்நூல்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளையெல்லாம் பற்றி இங்கு எழுத இடமில்லை; ஓர் உதாரணத்தை மாத்திரம் எடுத்துக்கொள்கிறேன். நாடகமேடையில் விளக்குகளை அமைக்கும்போது அவைகளின் மூலமாக அருகிலிருக்கும் தூண்களின் நிழல் அரங்கத்தில் ஆடுபவர்கள்மீது விழலாகாது என்று குறிப்பிட்டிருக்கிறது. அன்றியும் ஆடவர் பெண் வேஷம் பூணுவதானால் இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருக்கிறது. இக்காலத்தில் உபயோகிக்கப்படும் 'ஐப்ரோ பென்ஸ’ல்' என்பதைப் போலப் புருவத்திற்கும் கண்ணிற்கும் மைதீட்ட அக்காலத்திலேயே ஒரு சிறிய கருவி இருந்ததாக அறிகிறோம்.
தமிழ் நாடகமானது இவ்வாறு அக்காலத்திலே உன்னத நிலையை அடைந்திருந்தால் அக்காலத்தில் தமிழ் நாடக நூல்கள் இருந்திருக்க வேண்டுமே? அவை ஏன் பிற்காலத்தில் மறைந்து போயின? என்னும் இக்கேள்விகளுக்கு நாம் தக்க பதில் கூறித்தான் ஆகவேண்டும். இவைகளைப் பற்றி ஆராயின், பழங்காலத்து நூல்களெல்லாம் ஓலைகளில்தான் எழுதப்பட்டன என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் என் சிற்றறிவிற்கு ஏற்றபடி ஆராயப் புகுந்தபோது பல அறிஞர்களை ஓலையில் எழுதப்படும் நூல் எத்தனை காலம் கெடாது நிற்கும் என்று வினவினேன். அவர்களுள் பெரும்பாலோர், எவ்வளவுதான் ஜாக்கிரதையாக நாம் ஓர் ஓலை நூலை வைத்திருந்தபோதிலும், அது 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு மேல் நிற்காது; துகள் துகளாய்ப்போய் விடும் என்று கூறினார். ஆகவே, ஒரு நூலை இவ்வரம்பிற்குள்ளாக அடிக்கடி பெயர்த்துப் புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு வராவிட்டால் அந்நூல் பிற்காலத்தில் நிலைத்திருக்க முடியாது. இம்மாதிரியாகத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் அடிக்கடிப் பெயர்த்து எழுதப்பட்டதனால்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. நாடக நூல்களை அடிக்கடி பெயர்த்து எழுதுவோர் வரவரக் குறைந்து கொண்டே வந்தனர் போலும்! அடியார்க்கு நல்லார் தம் காலத்திலேயே அகத்தியம், பரதம், மாபுராணம், பூதபுராணம் முதலிய நாடக நூல்கள் மறைந்து போனதாகக் கூறியிருக்கின்றார். அவர் காலத்தில் வழங்கியிருந்த மதிவாணன் நாடகத்தமிழ், பரத சேனாதிபதியம் என்னும் இரண்டு நூல்களைப்பற்றிப் பேசியிருக்கிறார். இவையிரண்டிலும் மதிவாணன் நாடகத் தமிழ் மாத்திரம் ஏதோ நமது புண்ணியவசத்தால் பிழைத்திருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், நாம், நாடகம், நாடகத், அக்காலத்தில், நாடக, என்பது, அடியார்க்கு, நல்லார், நாடகங்கள், பற்றி, என்னும், முதலிய, என்பதை, நாடகக், அறிகிறோம், ஆகவே, நூல்கள், நமது, பிரிவு, நமக்குக், கலைக், கட்டுரைகள், இடங்களில், ஐயமில்லை, இருந்ததாக, உட்கார, மறைந்து, பிற்காலத்தில், நூலை, அடிக்கடி, மதிவாணன், பெயர்த்து, வேண்டும், மாத்திரம், எப்படி, அவைகளின், விவரங்களும், வள்ளி, இன்னவிடம், பழங்காலத்து, உறுதியாய்க், தமிழ்மொழி, முத்தமிழ், வருகிறது, நாடகத்தமிழ், முதலியார், சம்பந்த, drama, arts, கலைகள், வேண்டுமென்று, ஊகிக்கலாம், அக்காலத்திலேயே, இருந்திருக்க, கூறலாம், இங்கு, ", சூத்திரத்தில், நூல், தொல்காப்பியம், அந்நூல், காலத்திலேயே