தென் அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள்
தென் அமெரிக்காக் கண்டம் பூமியின் மேற்கு, தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்த நிலப்பரப்பின் பகுதியாகும். இக்கண்டத்தின் சிறுபகுதி வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது அமெரிக்காக்களின் துணைக்கண்டம் என்றும் கருதப்படுகிறது.
தென் அமெரிக்காக் கண்டம் உலகின் நான்காவது பெரிய கண்டமாகவும் மக்கள்தொகைப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா கண்டங்களை அடுத்து உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் விளங்குகிறது.
மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் எல்லைகளாக அமைந்து உள்ளன.
தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது .
தென் அமெரிக்காக் கண்டத்தில் 12 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 14 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | அர்ஜென்டினா (Argentina) | பியோனஸ் ஏர்ஸ் | |
2 | ஈக்குடோர் (Ecuador) | கியூடோ | |
3 | உருகுவே (Uruguay) | மோண்ட்வீடியோ | |
4 | கயானா (Guyana) | ஜார்ஜ்டவுன் | |
5 | கொலம்பியா (Colombia) | பொகோட்டா | |
6 | சிலி (Chile) | சாண்டியாகோ | |
7 | சுரினாம் (Suriname) | பரமரிபோ | |
8 | பராகுவே (Paraguay) | அஸன்சியன் | |
9 | பிரேசில் (Brazil) | பிரேசிலியா | |
10 | பிரெஞ்சு கயானா (French Guiana) | கெய்ன் | |
11 | பெரு (Peru) | லிமா | |
12 | பொலிவியா (Bolivia) | சுக்ரே (அதிகாரப்பூர்வ) லா பாஸ் (அரசாங்கத்தின் இருக்கை) |
|
13 | போக்லாந்து தீவுகள் (Falkland Islands) | ஸ்டான்லி | |
14 | வெனிசலா (Venezuela) | காராகாஸ் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தென் அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள், தென், நாடுகள், அமெரிக்காக், world, கண்டம், மாக்கடலும், அமெரிக்கா, கயானா, கண்டமாகவும், சுமார், issues, countries, உலகம், தெற்கு, உலகின், பெரிய