ஆசியாக் கண்டம் - உலக நாடுகள்
ஆசியா உலகின் மிகப் பெரிய, அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆகும். இது பூமியின் கிழக்கு, வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்த யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும்.
பூமியின் மொத்தப் பகுதியில் 8.7% பரப்பளவு அடங்கியது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும்.
கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் இதன் எல்லைகளாக அமைந்து உள்ளன. மேலும் இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும், காக்கேசிய மலைகள், காஸ்ப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.
ஆசியா கண்டமானது வட ஆசியா, மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா என 6 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆசியாக் கண்டத்தில் 49 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 59 நாடுகள் அடங்கியுள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசியாக் கண்டம் - உலக நாடுகள், ஆசியா, நாடுகள், world, ஆசியாக், கண்டம், கிழக்கு, பெருங்கடலும், timor, சிங்கப்பூர், china, republic, தீவு, குவைத், பூமியின், countries, உலகம், issues, ஆகும், arab