கர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா? - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
உண்மையைச் சொல்லப் போனால் கரு வலுவாக, ஆரோக்கியம் உள்ளதாக இருந்தால், வீதியிலோ, வானத்திலோ எந்த விதமான பயணங்களும் தாய்க்கோ, வயிற்றில் வளரும் கருவிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. எந்தப் பிரயாணத்தையும் தாக்குப் பிடிக்கக் கூடிய சக்தி சாதாரண கர்ப்பத்திற்குண்டு. ஆயினும் சில நோயுள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதே. உதாரணமாக
• கடுமையான இரத்தசோகை உள்ளவர்கள்.
• சூல்வித்தகம் ஊடாக கருவிற்கு போஷணைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதில் பாதிப்பு உள்ளவர்கள் (Placental insuficency)
• குருதி உறையக் கூடிய வாய்ப்புள்ளவர்கள்
• சிக்கிள் செல் (Sickle cell anaemia)
நோயுள்ளவர்கள் இவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடனேயே விமானப் பயணம் செய்ய வேண்டும். கர்ப்பமாயிருக்கும் முதல் 12 வாரங்களில் பலருக்கு வயிற்றும் புரட்டு, வாந்தி, களைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் இவற்றிற்காக அவசரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. மருத்துவரின் ஆலோசனையுடன் வேண்டிய முன்னேற்பாடுகளுடன் பயணிக்கலாம்.
உங்களுக்கு விமானப் பயணம் பற்றிய சில தொழில்நுட்பத் தகவல்கள் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு விமானப் பயணம் மேலும் பயத்தை ஏற்படுத்தக் கூடும். கதிர் வீச்சுகளால் கருச்சிதைவு ஏற்படலாம். அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். இதனால்தான் கருவுற்றிருக்கும்போது கர்ப்பிணிகளை எக்ஸ்ரே எடுப்பதைக் கூட இயலுமானவரை தவிர்க்கிறார்கள்.
விமானத்தில் உயரப் பறக்கும் போது சூரியனின் கதிர் வீச்சு கூடியளவில் வரும் என்பதால் குழந்தையைப் பாதிக்குமா என நீங்கள் ஜயுறக் கூடும். உண்மைதான் தரையிலிருப்பதை விட வானத்தில் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கவே செய்யும். ஆயினும் அது கருச்சிதைவையோ அங்கக் குறைபாட்டையோ ஏற்படுத்தக் கூடியதாக இருக்காது.
எனவே தயக்கமின்றிப் பயணம் செய்யலாம். கர்ப்பத்தின் எந்தக் காலத்தில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கேட்டால் கர்ப்பத்தின் நடுப்பகுதி என்று தயக்கமின்றிச் சொல்லாம். அதாவது 18 முதல் 24 வாரம் வரையான காலம் என்று சொல்லலாம். ஏனெனில் பொதுவாகவே இக்காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.
ஆனால் இந்தக் காலத்தில் மட்டும்தான் விமானப் பயணம் செய்யுங்கள் என்பது இதன் அர்த்தமல்ல. அடுத்ததாக மிக ஆபத்தான காலம் என்று எதனைச் சொல்லாம் என்று நீங்கள் கேட்கக் கூடும்.. பயணத்தின்போது திடீர் மகப்பேறு ஏற்படாதிருக்கக் கூடிய காலம்தான். அதாவது 36 வாரத்திற்குப் பிந்திய காலத்தில் பயணம் செய்வது அவ்வளவு உசிதமானதல்ல.
அதிலும் காலத்திற்கு முந்திய பிரசவம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் முக்கியமாக இக்காலகட்டத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரட்டைக் குழந்தைகள் உள்ளவர்கள் 34 வாரங்களுக்குப் பின்னர் கவனமாக இருப்பது நல்லது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா? - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பயணம், விமானப், பெண்கள், காலத்தில், கட்டுரைகள், கூடிய, articles, உள்ளவர்கள், கருச்சிதைவு, women, கர்ப்ப, ladies, மருத்துவக், பாதுகாப்பானதா, கூடும், நீங்கள், வரும், அங்கக், கதிர், இக்காலகட்டத்தில், முக்கியமாக, நல்லது, ஏற்படுத்தக், காலம், சொல்லாம், அதாவது, கர்ப்பத்தின், ஆயினும், செய்ய, வேண்டிய, கர்ப்பமாயிருக்கும், சாதாரண, section, ஏதாவது, கருவிற்கு, வாய்ப்புள்ளவர்கள், மருத்துவரின், வேண்டும், கவனமாக, நோயுள்ளவர்கள், உங்களுக்கு