பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில், குழந்தைகள் மருத்துவம் துறை சார்பில் “மகளிர் நலம் பேணுதல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொ) எஸ்.செளந்தரராஜன், துணை முதல்வர் ஆதிநாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மருத்துவர் ராமலட்சுமி, ரேவதி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இக் கருத்தரங்கில் மருத்துவர் கே.சியாமளா பேசியதாவது: தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில் நிகழ்வதால் பாரம்பரிய மருந்துகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அது தவறானதாகும். மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதை நமது வருங்காலச் சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
மகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும். பின்பு 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்கும்போது கருப்பையின் புண்கள் விரைவாக ஆறிவிடும். 2ஆம் நாளில் மஞ்சள், மிளகு, நறுக்குமூலம், சுக்கு, அக்கரகாரம், ஓமம் ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து இள வறுப்பாக வறுத்து பிரசவ சூரணம் செய்து சாப்பிட வேண்டும்.
3ஆம் நாளில் 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்க வேண்டும். 5ஆம் நாளில் சிறிய துண்டுப் பெருங்காயத்தை எடுத்து நன்றாகப் பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும்.
இம் மருந்து சூதக வாயுவை நீக்கும். 9ஆம் நாளில் 5 கிராம் கடுகை நன்கு பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து சாப்பிட வேண்டும். 11ஆம் நாளில் 25 கிராம் சுக்கு, சிறிய துண்டு சாரணைவேர் ஆகியவற்றை நன்கு சூரணம் செய்து 50 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி அதில் சூரணத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு களி பதம் வரும் வரை கிண்டிக் கொடுக்க வேண்டும்.
13 ஆம் நாளில் 50 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 கிராம் பனை வெல்லத்தைப் பாகாக்கி அரைத்த பூண்டு விழுதை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டி கொடுக்கவேண்டும். இந்த மருந்து தாய்ப்பாலை அதிகரிக்கும். 15ஆம் நாளில் 50 கிராம் ஓமத்தை நன்கு காயவைத்து மேல்தோல் நீக்கி சூரணம் செய்து 100 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி, அதில் ஓமத்தைக் கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டிக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து மருத்துவர்கள் டி.சுவாதிதேவி, சி.காயத்ரி ஆகியோரும் வேவ்வேறு தலைப்புகளில் பேசினர். கே.பாலாஜி நன்றி கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கிராம், வேண்டும், நாளில், பாரம்பரிய, மருந்துகளை, நன்கு, பின்பு, செய்து, கட்டுரைகள், கொடுக்க, தவிர்க்கக், கூடாது, articles, மருத்துவக், மகப்பேறுக்கு, வைத்து, சூரணம், சாப்பிட, பாகாக்கி, ladies, women, ஊற்றி, அதிகரிக்கும், நல்லெண்ணெய், பொரித்து, அதில், பதத்தில், சிறிய, கிண்டிக், பொடி, மருந்து, பொதிந்து, பனைவெல்லத்தை, பனைவெல்லத்தில், மஞ்சளை, சித்த, முதல்வர், கருத்தரங்கில், ஆரோக்கியம், section, ஆகியோர், மருத்துவர், சுக்கு, ஆகியவற்றை, கற்கமாக்கி, அரைத்து, விரலி, எடுத்து