கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம் 1 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும்.
தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும்.
அரச மரத்தின் இலை, பட்டை, வேர் மற்றும் விதை ஆகியவற்றை இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் கருப்பைக் கோளாறுகள் நீங்கி நலம் பெறலாம்.
மாதுளை வேர்பட்டை, மாதுளை விதை ஆகியவற்றை காயவைத்து பொடி செய்து மூன்று கிராம் சுடுதண்ணீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கும்.
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.
வறுத்த காப்பிக் கொட்டையை ஒன்றிரண்டு எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் எச்சில் ஊறுவதைத் தடுக்கலாம்.
ஒரு முழு வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, ஒரு மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் ஒரு கை கொத்தமல்லியையும் சேர்த்து சட்டியில் போட்டு ஒரு படி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி கால்வாசியாக வற்ற வைத்து அடிக்கடி சிறுது சிறுது குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம் 1 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், வந்தால், கட்டுரைகள், articles, நன்றாக, கர்ப்ப, கருப்பை, குடித்து, உணவுக்கு, எடுத்து, சாப்பிட்டு, மருத்துவம், சித்த, காலத்திற்கான, women, மருத்துவக், ladies, சாறு, தட்டி, பின், போட்டு, சிறுது, காலை, சேர்த்து, கர்ப்பிணி, குழந்தை, section, பழம், விதை, கோளாறுகள், செய்து, ஆகியவற்றை, மாதுளை