கர்ப்பகால சந்தேகம்! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
குழந்தை எடை குறைவாக, அதாவது 2.2 கி.கி.,க்கு குறைவாக பிறப்பதை தவிர்க்க வேண் டும். இதற்காக, ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு, அதிக பருப்பு வகைகள், குறைந்த கொழுப்பு சத்து நிறைந்த பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் செயற்கை சர்க்கரை பயன்படுத்தலாமா?
சர்க்கரைக்கான மாற்றுப் பொருட்கள், பொதுவாக, எளிமையான புரோட்டீன் களால் உருவாக்கப் படும். அது சர்க்கரையாக இல்லாத போதும், நீரிழிவு நோயாளிகள் அதன் இனிப்பு சுவைக்காக பயன்படுத்துகின்றனர். அது கர்ப்ப காலத்தில், பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.
கர்ப்ப காலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டுமா?
கர்ப்பிணிகள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில், அடிக்கடி மற்றும் அதிகளவு மது அருந்தினால், “மதுவால் ஏற்படும் சிசு வளர்ச்சி குறைபாடு’ பிரச்னை உண்டாகும். இதனால், பிறக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, குழந்தைகள் அசாதாரணமாக நடந்து கொள்ளுவர்.
கர்ப்பிணிகள் தாங்களாகவே மருந்துகள் சாப்பிடலாமா?
கர்ப்பிணிகள் தாங்களாகவே மருந்துகள் சாப்பிடக்கூடாது. எப்போதும், மருத்துவரின் ஆலோசனை பெற்றே மருந்துகள் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக, கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாத காலங்களில், தாங்களாக மருந்துகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நன்றி: தினமலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்பகால சந்தேகம்! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், வேண்டும், கட்டுரைகள், தவிர்க்க, காலத்தில், மருந்துகள், articles, கர்ப்ப, கர்ப்பகால, கர்ப்பிணிகள், ladies, women, சந்தேகம், மருத்துவக், அருந்துவதை, வளர்ச்சி, தாங்களாகவே, குறைவாக, section, குழந்தை, நிறைந்த, ஆகியவற்றை, சாப்பிட