கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
ஓமக்களி செய்ய தேவையானவை :
ஓமம்-100கிராம்
நெய்-100மிலி
கருப்பட்டி-400கிராம்
செய்முறை :
முதலில் ஓமத்தினை நன்றாக வெயிலில் காயவைத்து,இடித்து மேல் தோலை நீக்கிக் கொள்ளவும். பின்பு சுமார் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.இவ்வாறு ஊறிய ஓமத்தினை மை போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு கருப்பட்டியை பாகு போன்று காய்ச்சி, அதனுடன் அரைத்து வைத்திருந்த ஓமத்தையும், நெய்யையும் சேர்த்து காய்ச்சி களிப்பக்குவம் வந்தவுடன் இறக்கிக் கொண்டால் ஓமக்களி தயார்!
குறிப்பு: நெய்க்குப் பதிலாக நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம்
அளவு:
50கிராம் அளவு. பிரசவத்திற்குப் பின் பத்தாம் நாள், சுக்குக்களி இரண்டு நாட்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அதன்பின் ஓமக்களியை இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
ஓமக்களியின் பயன்கள்:
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும்.பசியைத் தூண்டும்.குடலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும்
நன்றி : உலகத் தமிழ் மருத்துவக் கழகம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், ஓமக்களி, கட்டுரைகள், கர்ப்பப்பை, தன்னிலையடைய, மருத்துவக், articles, உதவும், women, ladies, அளவு, இரண்டு, நாட்களுக்குக், காய்ச்சி, section, ஓமத்தினை, கொள்ளவும், பின்பு, அரைத்து