தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம். உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான். மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்தப் பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.
பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக மருத்துவர் பரிந்துரை செய்வது அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது. தாயிடம் இருந்து முதன் முதலாக கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், எளிதில் அந்தக் குழந்தையை எந்த நோயும் தாக்காது.நீண்ட நாட்களுக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன. இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும் போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இன்றைய அவசர உலகில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை. அதனால் விரைவிலேயே புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் குறைந்து போய் விடுகிறது. அவர்கள், மனதை அமைதியாக வைத்திருந்தால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.தாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும் போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதே போல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.
பிரசவத்திற்கு பிறகு முதல் நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும். வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அவசரம் - பதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே... உங்கள் மனதை எப்போதும் அமைதியாக ஆக வைத்திருங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், தாய்ப்பால், பெண்கள், குழந்தைக்கு, அந்த, பால், பெண்ணுக்கு, கட்டுரைகள், வேண்டும், articles, சுரப்பு, கொடுக்கும், தாயானவள், கவனத்திற்கு, தாய்மார்களின், சுரக்க, குறைந்து, சக்தி, மருத்துவக், அதனால், சுரக்கும், women, பெண்களுக்கு, குழந்தையின், என்கிற, ladies, என்கிறார்கள், பாலை, மூலம், நோய், உடலில், குழந்தையை, கொடுப்பதன், குழந்தையானது, ஆக்ஸிடோஸின், புரோலாக்டின், உதவுகிறது, போல், சுவைக்க, இருந்து, அமைதியாக, போது, தாயின், வேலைக்கு, மனதை, வாய்ப்புகள், சுரப்புக்கும், உணவு, அவளது, அதைத், குறைவான, வகைகள், தினமும், section, இருக்கும், குழந்தை, சுமார், சுரப்பும், விடும், அளவில், சுரப்பதும், எந்த, கொடுக்க, கொண்ட, மார்பகம், ஊட்டும், மார்பகத்தின், இல்லை, பிறந்த