தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு 2 வயதுக்கு பிறகும் தாய்ப்பால் கொடுத்து வந்த காலம்போய், இப்போது 6 மாதம் வரையிலாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று விளம்பரப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது வேதனைக்குறிய ஒரு செய்தி...
குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், பிறந்த இரண்டு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும். அவ்வாறு இந்த குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கும் முதல் பாலில்தான் (சீம்பால்) குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சீம்பால் தொடர்ந்து மூன்று நாள்கள் வரை சுரக்கும், அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். சீம்பால் குழந்தைகளுக்கு இயற்கை தந்த அரு மருந்து. எனவே ஒரு துளி கூட விணாக்காமல் சீம்பால் தர வேண்டும்.
இவ்வாறு எப்படித்தான் பால் புகட்டி வளர்த்தாலும் குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரங்களுக்கு, பிறந்த போது இருந்த எடையைக் காட்டிலும் குறையத்தான் செய்யும். ஆனால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மூன்றாம் வாரத்தில் இருந்து எடை கூட ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு தாய்க்கு குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு 750 மில்லி லிட்டர் வரை பால் சுரக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே முதல் 6 மாதங்களுக்கு ஒரு தாய் தனது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 12 முறை இரவு, பகல் என்று பாராமல் அதாவது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் தர வேண்டும். எடை குறைவாகப் பிறந்த குழந்தை என்றால் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். இதனால் நல்ல ஆரோக்கியமான கொளு,கொளு குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.
ஆனால் அதன் பின்பு இணை உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பிறகும் 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மிக்க நல்லது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும்.
தாய்க்கும் ஆரோக்கியம்: இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு மார்பகப் புற்றுநோயிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கிறது. இது தவிர பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கும் பட்சத்தில் உதிர போக்கு (ரத்த போக்கு) குறையும். மேலும் தொடர்ந்து 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் காலமும் தள்ளிப்போகும். இதன் மூலம் குறுகியகாலத்தில் அடுத்த பிரசவத்தை தடுக்க முடியும்.
வேலைக்கு செல்லும் தாய்: தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின்பு தரலாம். தாயப்பாலை சாதாரண அறை வெப்ப நிலையில் எட்டு முதல் பத்து மணி நேரம் வைக்கலாம். குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும், அதனுள் உள்ள ப்ரீசரில் (-20 டிகிரி செல்சியஸ்) மூன்று மாதங்கள் வரை தாய்ப்பாலை கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். எனவே வேலைக்கு செல்லும் தாய்மார்கள் இதையே கார ணமாகச் சொல்லி குழந்தைகளுக்கு தாய்ப்பால் தராமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இது போன்ற சிக்கலை தீர்க்கவே இப்போது இந்தியாவில் அரசு பணிக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு மருத்துவ விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் துறைகளிலும் இதை பின்பற்ற வேண்டும் என்று அரசுக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிர்ச்சி அறிக்கை: யுனிசெப் நிறுவனம் உலகம் முழுவதும் ஆய்வு நடத்தி, உலக குழந்தைகள் அறிக்கை - 2011 வெளியிட்டது. இந்த அரிக்கையின்படி, உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 13.67 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 32.6 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆறு மாதம் தொடர்ந்து தாய்ப்பால் வழங்கப்படுகிறது என தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது.
கர்ப்ப காலத்திலேயே, கர்ப்பிணியின் தாய் இது குறித்து தனது மகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு தாய் ஒரு கருத்தை எடுத்துக் கூறுவதன் மூலம் கண்டிப்பாக 95 சதவீதத்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்போம். இரண்டு வயது வரை இணை உணவுடன் தாய்ப்பாலையும் புகட்டுவோம் என்று ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் உலகத் தாய்ப்பால் வார விழாவில் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், தாய்ப்பால், பிறந்த, பெண்கள், வேண்டும், குழந்தை, குழந்தைகளுக்கு, மூலம், தொடர்ந்து, குழந்தைக்கு, மருந்து, இரண்டு, கட்டுரைகள், தாய், தாய்ப்பாலே, கொடுக்க, செல்லும், சீம்பால், articles, மருத்துவர்கள், கூறுகின்றனர், வேலைக்கு, முடியும், அவசியம், முறை, மாதங்களுக்கு, மாதங்கள், நேரத்தில், குழந்தைகள், தனது, ladies, மாதம், மருத்துவக், women, தேதி, கிடைக்கிறது, தாய்க்கும், போக்கு, வேகமாக, உலகம், எடுத்துக், முழுவதும், தாய்மார்கள், வயது, மேலும், இல்லை, அறிக்கை, பால், நேரத்திற்குள், கொடுக்கும், மூன்று, கண்டிப்பாக, இப்போது, இந்தியாவில், பிறகும், சுரக்கும், இவ்வாறு, நேரம், இதனால், கொளு, நேரத்துக்கு, தாய்க்கு, section, கொடுப்பதன், பின்பு