தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம் 2 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
கோரை செடியின் கிழங்கை பச்சையாக எடுத்து நன்றாக அரைத்து சிறிது எடுத்து மார்பில் பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
ஒரு கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து இரண்டு முறை பாலுடன் சேர்த்து குடித்தால் தாய்பால்அதிகரிக்கும்.
ஆமணக்கு இலையை நெய் தடவி நெருப்பில் வாட்டி லேசான சூட்டில் மார்பகத்தில் வைத்து கட்டி கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் தொடர்ந்து பற்றுப் போட்டு வந்தால் தாய்பால் அதிகமாக சுரக்கும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் சேர்த்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
அகத்தி இலையைச் சமைத்து உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
துளசி, அதிமதுரம் ஆகியவற்றை வெந்நீர் சேர்த்து சந்தனம்போல் அரைத்து தாயின் மார்பகத்தில் தடவினால் குழந்தைகள் பால் நன்றாக அருந்தும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம் 2 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், தாய்ப்பால், பெண்கள், வந்தால், கட்டுரைகள், சாப்பிட்டு, சுரக்கும், அதிகமாக, இலையை, அரைத்து, சேர்த்து, articles, சித்த, அதிகரிக்க, ladies, women, மருத்துவம், மருத்துவக், கலந்து, அதிமதுரம், மார்பகத்தில், சமைத்து, தொடர்ந்து, சுரப்பு, பெருகும், பால், section, எடுத்து, நன்றாக, போட்டு