தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம் 1 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.
வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போன்று செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் பெருகும்.
சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
தேன், அமுக்கராங்கிழங்கின் ரசம், மிளகுரசம், மணத்தக்காளி ரசம் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் தூய்மையடையும்.
பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகமாக சுரக்கும்.
நத்தைச் சூரி வேரை 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி இரண்டு வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும்.
தாளிக்கீரை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம் 1 - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், தாய்ப்பால், பெண்கள், சுரக்கும், அதிகமாக, கட்டுரைகள், கலந்து, வந்தால், articles, சேர்த்து, அதிகரிக்க, குடித்து, மருத்துவம், பாலில், சித்த, மருத்துவக், women, ladies, வேளை, ரசம், அரைத்து, எடுத்து, கொண்டால், பெருகும், காய்ச்சி, section, வைத்துக், போட்டு, கீரையை