கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு சுமார் 50 சதவீதம் அதிகரித்துவிடுவதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகமிக அவசியம். எனவே கர்ப்பிணிகள் வால்நட், பேரீச்சம்பழம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடவும்.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கருவில் உள்ள குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பாலில் பாஸ்பரஸ் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. எனவே உணவில் பால், தயிர், மோர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். காபி, டீ, குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதை தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.
நாள்தோறும் 1 1/2 கப் வேக வைத்த காய்கறி (அ) ஒரு கப் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் எளிதில் கிடைத்துவிடும்.
ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்ய சோடியம் தேவை. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல் குறைத்துக் கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கட்டுரைகள், articles, சேர்த்துக், கர்ப்பிணிகளின், அவசியம், மிகவும், ladies, மருத்துவக், கனிவான, கவனத்திற்கு, women, கால்சியம், நல்லது, பச்சைக், எலும்பு, குறைத்துக், தாது, section, காலத்தில், ரத்தத்தின், அதிகம், உள்ள