சைவ சித்தாந்த சாத்திரங்கள் - வினா வெண்பா - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூல்
நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக் கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா நின்றவா றெவ்வாறு நீ. |
1 |
இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி மருளி நிலையருளு மானும் - கருவியிவை நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா வீங்குனரு ளாலென் பெற. |
2 |
புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள் ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா ஞானமலை யாவாய் நவில். |
3 |
கனவு கனவென்று காண்பரிதாங் காணி னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள் தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா யானவத்தை காணுமா றென். |
4 |
அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின் குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள் தாமா வறியா தடமருதைச் சம்பந்தா யாமா ரறிவா ரினி. |
5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - வினா வெண்பா - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சாத்திரங்கள், சம்பந்தா, வினா, சித்தாந்த, வெண்பா, தடமருதைச், கொண்டது, shaiva