திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூல்
கணபதி வணக்கம்
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண். |
திருவருட்பயன் -முதல் பத்து
1.பதிமுது நிலை
அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. |
1 |
தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி பின்னம் இலான் எங்கள் பிரான். |
2 |
மெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்புஇன்மை யான். |
3 |
ஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப் போக்கு அவன் போகாப் புகல் . |
4. |
அருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் உளன். |
5. |
பல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன் இல்லாதான் எங்கள் இறை. |
6. |
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வான்நாடர் காணாத மன். |
7 |
எங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம் தங்கும்அவன் தானே தனி. |
8. |
நலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலம்இலன் பேர் சங்கரன். |
9. |
உன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து |
10. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருவருட்பயன், சித்தாந்த, நூல்கள், சாத்திரங்கள், உருவம், எங்கள், இலக்கியங்கள், பத்து, எங்கும்