சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூல்
பாயிரம்
[காப்பு]
ஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு களியார வருமானை கழல்நாளு மறவாமல் அளியாளும் மலர் தூவும் அடியார்க ளுளமான வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே. |
நடராசர் துதி
ஓங்கொளியாய் அருண்ஞான மூர்த்தி யாகி உலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணத் தேங்கமழும் மலரிதழி திங்கள் கங்கை திகழரவம் வளர்சடைமேல் சேர வைத்து நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள் நின்றிமையோர் துடி செய்ய நிருத்தஞ் செய்யும் பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும் புந்தியினு முறவணங்கிப் போற்றல் செய்வாம். |
சிவகாமியம்மை துதி
பரந்தபரா பரையாதி பரன திச்சை பரஞானம் கிரியைபர போக ரூபம் தருங்கருணை உருவாகி விசுத்தா சுத்தத் தனுகரண புவனபோ கங்கள் தாங்க விரிந்தவுபா தானங்கண் மேவி யொன்றாய் விமலாய் ஐந்தொழிற்கும் வித்தாய் ஞாலத் தரந்தைகெட மணிமன்றுள் ஆடல் காணும் அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம். |
விநாயகர் துதி
நலந்தரல்நூ லிருந்தமிழின் செய்யுட் குற்றம் நண்ணாமை இடையூறு நலியாமை கருதி இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி இணைவேல்க ளிகழ்ந்தகயற் கண்ணியொடு மிறைவன் கலந்தருள வருமானை முகத்தான் மும்மைக் கடமருவி யெனநிலவு கணபதியின் அருளால் அலர்ந்துமது கரமுனிவர் பரவவளர் கமல மனைதிரு வடியினைகள் நினைதல் செய்வாம். |
முருகக்கடவுள் துதி
வளநிலவு குலவமரர் அதிபதியாய் நீல மயிலேறி வருமீச னருள்ஞான மதலை அளவில்பல கலையங்கம் ஆரணங்கள் உணர்ந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அண்ணல்விறலெண்ணா உளமருவு சூரனுரம் எமதிடும்பை யோங்கல் ஒன்றிரண்டு கூறுபட வொளிதிகழ்வேல் உகந்த களபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த கந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சிவப்பிரகாசம், நூல்கள், துதி, சித்தாந்த, செய்வாம், சாத்திரங்கள், இலக்கியங்கள், நூல், வருமானை