சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பரபக்கம், சுபக்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்த நூல். சைவ சித்தாந்தத்துடன் முரண்படுகின்ற புறச்சமயக் கொள்கைகளை மறுத்துச் சித்தாந்தக் கொள்கைகளை நிலை நாட்ட முயல்வதே பரபக்கம் என்னும் பகுதியின் நோக்கம். சுபக்கம் சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களை பன்னிரண்டு அத்தியாயங்களாக விரித்து எழுதப்பட்ட பகுதி. பரபக்கம், 301 பாடல்களாலும், சுபக்கம், 328 பாடல்களாலும் ஆனது.
பரபக்கம்
நூல்
காப்பு
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள், உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத், திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே. |
1 |
மங்கல வாழ்த்து
சிவபெருமான்
ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப் தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் |
2 |
சத்தி
ஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம். தேசருவம் அருவுருவம் உருவ மாகித் பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் ஆசகலும் அடிய ருளத் தப்பனுட னிருக்கும் |
3 |
விநாயகக் கடவுள்
இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றல் தயங்குபேர் ஔ¤யாகி எங்கு நின்ற பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் |
4 |
சுப்பிரமணியக் கடவுள்
அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையில் கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந் தன் |
5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், பரபக்கம், சிவஞான, சுபக்கம், சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சித்தாந்த, பாடல்களாலும், மாகித், கொள்கைகளை, கடவுள், வைப்பாம், சித்தாந்தக், இலக்கியங்கள், மெய்கண்ட, போதத்தின், நூல்