சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பரமுத்தி மறுப்பு
உடல்விடக் கடத்துட் படுவெளி போலெனில் விட்டென் பெறவுடற் பட்டென் படமெற் றிகலற வொருவ னிவ்வகை தெளியி லகிலமு முத்தி யடைந்திட வேண்டு மறிந்தோர் முத்தி யடைந்தோ ராயின் பிறிந்தோ ருயிர்பல பேதத் தன்றே பிரமஞானம் வாரா தென்றது கன்ம காண்டங் காரண மாக மன்னும் விவேக மென்னி லவித்தைக் கேது காரண மோதினை யில்லை யிதற்குங் காரணம் விதித்தல்வேண் டின்றே யரணியி லுதித்த கனலவை கவர்வென விரதத் துதித்த விவேக மழித்தல் வருந்தி யாயினுந் திருந்திய வேத நீதி யெல்லா நீத்துப் போதமொன் றறியார் தாமு மவ்வழி நடத்தல் பொறியோ போத நெறியோ விதுபவ நீங்கிடு நெறிதரு பாங்கினைப் பழித்த னன்றி கொன்ற லன்றே யன்றியு ஞால நீதியு நான்மறை நீதியும் பாலருன் மத்தர் பசசரி லெனவு முறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந் தானே தவிரா தானாற் புரியா தொழிந்திடி னிரயத் தழுத்துத றிடமே யுய்த்தோ னன்றி முத்தி யுரைத்தல் பித்தோ பிரமஞ் செத்தோ பெறுவ துடலையு நீயே சடமெனச் சாற்றுனை வையினும் வாழ்த்தினும் கொய்யினும் கொளுத்தினும் வணங்கினும் முதைப்பினும் பிணங்குதல் செய்யாப் பிரமத் தன்மை பெறுவதெக் கால மிருக்கு நாள்சில வெண்ணினூல் கதறித் தருக்கம் பேசித் தலைபறி யுற்றுக் கண்டோ ரீந்த பிண்டமுண் டலறிப் பன்னோ யாக்கை தன்னோ யுற்றுடல் விடவரு மென்று நடுநடு நடுங்கி விட்டோர் தெய்வத் தொட்டின் றன்றியும் யானே வெயரு மானே னென்றலி னவ்வவர் சீறி யவ்வவர் வாணாட் செவ்விதி னிரயஞ் சேர்த்துவ ரதனால் மாயா வாதப் பேயா வுனக்குத் தேவரி லொருவருண் டாக மேவரு நரகம் விடுத்தலோ வரிதே |
ஐக்கியவாதி சங்கற்பம்
பெத்தநிலை
அரிதேர்ந் துணராப் பெரியோ னுரைத்த பதிபசு பாச விதிமுறை கிளக்கில் ஈச நேக னெண்ணிலி பசுக்கள் பாச மிருவகைப் பரிசின துலகத் தாயவ னுயிர்க்கு மாயையி னருளால் இருவினைத் தொகையி லுருவினைத் தருமாற் கருமுகி லடர விரிதரு கதிர்போன் றறிவா முயிரிற் பிறியா தேயு மீட்டு மிருபய னூட்டிடு நியதிக் |
முத்தி நிலை
கொருபொழுது திருபயனுகர்வுற மருவுத லின்மை யாதன் முன்னிய காலைச் சத்தி நிபாத முற்றிறை யருளா லுருவுகொ டுலகு தெரிவுற மருவி மாசுறுந் தூசு தேசுற விளக்குந் தன்மையி ணுணர்த்தும் புன்மைக ணீங்கி நீரு நீருஞ் சேருஞ் தகைமையி னறிவினோ டறிவு செறிவுறப் பொருந்தி யொன்றா மென்பதை யுலகோர் நன்றா முத்தி யென நவின் றனரே |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், முத்தி, நூல்கள், நிராகரணம், சித்தாந்த, சங்கற்ப, சாத்திரங்கள், னன்றி, விவேக, இலக்கியங்கள், காரண