போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூல்
பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த நடுவேதம் - போதத்தால் ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச் சேம வொளியெவருந் தேரும்வகை - மாமணிசூழ் மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத பல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து மெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும். |
அந்தமடி நடுவென் றெண்ண வளவிருந்து வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற நெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந் தொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு - மெல்லாம் ஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய் அருவமா யெவ்வுயிரு மார்த்தே - யுருவுடைய மாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத் தானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின் கண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால் எண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக் கட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற் |
பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால் தனுகரண மும்புவன முந்தந் தவற்றான் மனமுதலாவந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங் காட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற வெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப் பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப் புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் எல்லைப் படாவுதரத் தீண்டியதீப் - பல்வகையா |
லங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால் எங்கேனுமாக வெடுக்குவென - வெங்கும்பிக் காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக் கேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு - மாசறவே செய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத னல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப நல்ல வறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா வக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித் துக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள், போற்றிப், சித்தாந்த, பஃறொடை, நூல்கள், சாத்திரங்கள், பொற்புடைய, நூல், இலக்கியங்கள்