ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.044.திருச்சோற்றுத்துறை

6.044.திருச்சோற்றுத்துறை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்.
தேவியார் - ஒப்பிலாம்பிகை.
2523 | மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.1 |
காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவனே! முறையாக எல்லா உலகையும் படைக்கின்றவனே! ஏழுலகும் தாங்குகின்றவனே! இன்பம் தருபவனாய்த் துன்பங்களைப் போக்குகின்றவனே! முன்னே காத்தமை போல எப்பொழுதும் எல்லோரையும் காக்கின்றவனே! தீவினையை உடைய அடியேனுடைய தீவினையை நீக்கியவனே! திருச்சோற்றுத்துறையிலுள்ள விளங்கும் ஒளியை உடைய சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2524 | தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.2 |
உலகத் தலைவனே! தத்துவனே! அடியார்க்கு அமுதே! நிலைபேறுடையவனே! ஒப்பற்றவனே! அறிவில்லாத கூற்றுவனை வெகுண்டு உதைத்துத் தண்டித்தவனே! யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய கஜசம்கார மூர்த்தியே! கொடிகள் உயர்த்தப்பட்ட மும்மதில்களையும் அழித்த வில்லை உடையவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2525 | முற்றாத பான்மதியஞ் சூடி னானே உற்றாரென் றொருவரையு மில்லா தானே கற்றானே யெல்லாக் கலைஞா னமுங் செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.3 |
வெள்ளிய பிறை மதி சூடியே! முளைத்து வெளிப்பட்ட கற்பகத் தளிர் ஒப்பவனே! தனக்கென வேண்டியவர் யாரும் இல்லாதானே! உலகைப் பாதுகாக்கும் சுடரே! எல்லாக் கலைஞானமும் ஒதாதுணர்ந்து வேதம் ஓதுபவனே! ஒன்றும் கல்லாத அடியேனுடைய தீவினையும் அதனால் விளையும் நோயும் நீங்குமாறு அவற்றை அழித்தவனே! திருச்சோற்றுத் துறையுள் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2526 | கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே எண்ணவனா யெண்ணார் புரங்கள் மூன்றும் திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.4 |
பற்றுக் கோடாய் இருந்து உலகைக் காப்பவனே! பல ஊழிகளையும் கண்ட, காலம் கடந்த பெருமானே! தேவனாய்த் தேவர்களுக்கும் மற்றை உயிர்களுக்கும் அருள்செய்பவனே! வேத வடிவினனாய் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே! எங்கள் உள்ளத்தில் இருப்பவனாய்ப் பகைவருடைய மும்மதிலும் இமை கொட்டும் நேரத்தில் தீக்கு இரையாகுமாறு அவற்றைக் கண்டு சிரித்த உறுதியுடையவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! யான் உன் அடைக்கலம்.
2527 | நம்பனே நான்மறைக ளாயி னானே கம்பனே கச்சிமா நகரு ளானே அம்பனே அளவிலாப் பெருமை யானே செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.5 |
எல்லோராலும் விரும்பப்படுபவனே! நால் வேத வடிவினனே! கூத்தாடவல்ல ஞானத் கூத்தனே! கச்சி ஏகம்பனே! காவலை உடைய மும்மதில்களும் பொடியாகுமாறு செலுத்திய அம்பினை உடையவனே! எல்லையற்ற பெருமை உடையவனே! அடியவர்களுக்குக்கிட்டுதற்கரிய அமுதமானவனே! காளையை இவரும் பொன்னார் மேனியனே! திருச்சோற்றுத்துறை உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2528 | ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.6 |
உலகமெல்லாம் நீயேயாகிப் பொருந்திக் குறையாது மின்றி நிரம்பியிருப்பவனே! எல்லையற்ற பெருமை உடையவனே! உயிர்களிடத்து அருள் மிகுந்தவனே! குற்றாலத்தை விரும்பிய கூத்தனே! முத்தலைச் சூலம் ஏந்தி ஊழிவெள்ளங்கள் எல்லாம் மறையுமாறு உலாவுபவனே! உன்னைப் பெருமான் என்று நினைக்கும் உள்ளங்களில் சேர்ந்தவனே! திருச்சோற்றுத்துறையில் உள்ள திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2529 | வானவனாய் வண்மை மனத்தி னானே கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே தானவனாய்த் தண்கயிலை மேவி னானே தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.7 |
தேவனாய் வரம் கொடுக்கும் உள்ளத்தானே! சிந்தாமணியை உடைய தேவர்கள் பெருமானே! வேடனாய்ப் பன்றிப் பின் சென்றவனே! கொடிய மும்மதில்களை அழித்தவனே! குளிர்ந்த கயிலாயத்தை உறைவிடமாக விரும்பி உறைபவனே! தன்னை ஒப்பார் பிறர் இல்லாத பார்வதிக்கு இனியனே! திருச்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2530 | தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித் என்னவனா யென்னிதயம் மேவி னானே மன்னவனே மலைமங்கை பாக மாக தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.8 |
சுதந்திரனாய், எல்லா உலகங்களும் தானே ஆனவனாய், மெய்ப்பொருளாய், அடியார்க்கு அமுதமாய் என்னை அடிமை கொண்டவனாய், என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், பாச வினைகளைப் போக்கும் தலைவனாய்ப் பார்வதி பாகனாய்த் தேவர்கள் வணங்கும் காவிரியின் தென்கரையிலுள்ள திருத்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2531 | எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம் பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம் செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.9 |
எட்டுத் திசைகளுக்கும் கண்ணாகி உலகங்களைக் காப்பவனாய், முன் ஏழ் உலகங்களையும் படைக்கும் முதற் பொருளாய் நின்று, பின் அவற்றை அழித்தவனே! பிரமனும் திருமாலும் அறியாவண்ணம் ஆதியும் முடிவும் ஆகி அவர்களிலிருந்து வேறுபட்டவனே! தன்னைத் தலைவன் என்று துதிப்பவர்கள் மனத்தில் மற்றவர் அறியாதபடி பொருந்தியிருப்பவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2532 | மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை கையவனே கடியிலங்கைக் கோனை யன்று மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும் செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே |
6.044.10 |
நீலகண்டனே! திருமாலும் மற்றைத் தேவரும் அறியாத சூலபாணியே! இராவணனுடைய ஒளி வீசும் தலைகளையும் தோள்களையும் கால் விரலால் நசுக்கிய மெய்ப்பொருளே! அடியவர்கள் விரும்பியவற்றை அருளும் தேவனே! உயிரினங்களின் வேண்டுகோள்களைக் கேட்டு அவர்களுக்கு அருளும் நடுநிலை யாளனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்!
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.044.திருச்சோற்றுத்துறை , திருச்சோற்றுத், அடைக்கலம், துறையு, ளானேதிகழொளியே, னபயம், சிவனே, நானே, சிவனேயுன், அடியேன், திகழ், ஒளியாம், உறையும், திருச்சோற்றுத்துறையில், பெருமை, உடைய, உடையவனே, திருச்சோற்றுத்துறை, அழித்தவனே, கண்டு, திருமுறை, விளங்கும், மேவி, தேவர்கள், பின், அருளும், வானோர், றெப்போதும், பெருமான், விரும்பி, கேட்டு, ரறியா, திருமாலும், வணங்கும், தானே, ஒளியாய், எல்லையற்ற, அறியாத, பெருமானே, சார்ந்தார்க்கின், னமுதா, அடியார்க்கு, எல்லாம், எல்லா, எல்லோரையும், அடியேனுடைய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், உள்ளத்தில், ஆறாம், தீவினையை, அவற்றை, தேவாரப், வேதம், கூத்தனே