தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 அசீரிய அரசன் சல்மனாரின் காலத்தில், அவர் சிறைப்படுத்தப்பட்டு அடிமையானார். அவ்வடிமைத் தனத்தின் போதும். அவர் உண்மை வழியை விட்டு விலகாது நின்றார்,
3 தம் உடன் அடிமைகளான தம் குலச்சகோதரர்களுக்குத் தமக்கிருந்த எல்லாவற்றையும் நாளும் கொடுத்து வந்தார்.
4 நெப்தலி குலத்தில் அவரே மிகவும் இளையவர். ஆயினும், இளைஞர் செய்யும் சிறுபிள்ளைத்தனமான எச்செயலையும் அவர் செய்தவரல்லர்.
5 மேலும், இஸ்ராயேல் அரசன் எரொபோவாம் செய்து வைத்திருந்த பொற்கன்றுக் குட்டிகளை அனைவரும் வழிபட்டு வந்தபோதிலும், இவர்மட்டும் மற்றவர்களின் தொடர்பை விட்டு விலகினார்.
6 யெருசலேமிலுள்ள ஆண்டவரின் ஆலயத்திற்குப் போய், அங்கு இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை வழிபட்டு தம் முதற் பலன்களையும், பத்தில் ஒரு பாகங்களையும் தவறாது ஒப்புக்கொடுத்து வந்தார்.
7 முன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை யூத மதத்தைத் தழுவியோருக்கும் புறவினத்தாருக்கும் தம் பொருட்களில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்து வந்தார்,
8 அவர் இளமை முதல் இவை போன்ற நற்செயல்களைக் கடவுள் கட்டளைப்படி செய்து வந்தார்.
9 வயது வந்த போது, தம் குலத்தைச்சேர்ந்த அன்னாள் என்ற பெண்ணை மணந்து, அவள் முலம் ஒரு மகனைப் பெற்றார். அப்பிள்ளைக்குத் தம் பெயரையே சூட்டினார்,
10 சிறுவயது முதல் கடவுளுக்கு அஞ்சி, எலலாப் பாவங்களையும் விட்டு விலகி நடக்க வேண்டும் என்று அப்பிள்ளைக்கு நற்புத்தி புகட்டி வந்தார்.
11 அவ்வாறு வாழ்ந்து வருகையில் தான், அவர் தம் மனைவியோடும் மகனோடும் தம் குலத்தார் அனைவரோடும் சிறைப்படுத்தப்பட்டு நினிவே நகருக்குக் கொண்டு போகப்பட்டார்.
12 அங்கே அனைவரும் புறவினத்தாரின் உணவுகளை வாங்கி உண்டு வந்தனர். ஆனால் அவர் மட்டும் தம் ஆன்மாவைக் கறைப்படுத்தாதவாறு, அவற்றை விலக்கி வந்தார்.
13 இவ்வாறு அவர் தம் முழு இதயத்தோடும் ஆண்டவர் மேல் கருத்தாய் இருந்தார். எனவே, சல்மனசாரின் கண்களில் தயை கிடைக்கும்படி கடவுள் அவர் மேல் அருள் கூர்ந்தார்.
14 இதன் பயனாக, அவர் தம் விருப்பப்படியெல்லாம் செய்யவும், தாம் நினைத்த இடத்திற்கெல்லாம் போகவும் அரசன் அவருக்கு உரிமை அளித்திருந்தான்.
15 எனவே, தொபியாசு சிறைப்பட்டிருந்த எல்லாரிடமும் சென்று நல்ல அறிவுறைகளை அவர்களுக்குக் கூறி வருவார்.
16 அவர் மேதியருடைய நகரான இராஜேசுக்கு வந்த போது, அரசன் தமக்குப் பரிசாய்க் கொடுத்திருந்த பத்துத் தாலந்து வெள்ளி அவரிடம் இருந்தது.
17 அங்கே தம் இனத்தார் மத்தியிலே தம் குலத்தினரான கபேலுசு வறுமையில் வாடக் கண்ட அவர், கடன் பத்திரம் எழுதச்சொல்லி, மேற்சொல்லப்பட்ட பணத்தை அவனிடம் கொடுத்தார்.
18 பன்னாட்களுக்குப் பிறகு அரசன் சல்மனசார் இறந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் சென்னாக்கெரிப் அரியனை ஏறினான். இவனுக்கோ இஸ்ராயேல் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.
19 இதைக் கண்னுற்ற தொபியாசு, தம் சுற்றத்தார் யாவரையும் நாள் தோறும் போய்ப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, தமக்கு இருந்ததை அவர்கள் ஒவ்வொருவருக்கும் முடிந்த வரையில் கொடுத்து வருவார்.
20 பசித்தோர்க்கு உணவு அளிப்பார். ஆடையற்றோர்க்கு ஆடை வழங்குவார். இறந்தோரையும் கொலை செய்யப்பட்டோரையும் அடக்கம் செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்.
21 கடைசியாய் சென்னாக்கெரிப் புரிந்த தெய்வ நிந்தனையை முன்னிட்டுக் கடவுள் அவனுக்கு அனுப்பியிருந்த படுத்தோல்வியின் காரணமாக,அவன் யூதேயா நாட்டை விட்டுத் திரும்பி வந்து கோப வெறியால் இஸ்ராயேல் மக்களுள் பலரைக் கொன்று குவித்தான். தொபியாசோ அவர்கள் பிணங்களைப் புதைத்து வந்தார்.
22 இது அரசனுக்கு அறிவிக்கப்படவே, அவன் தொபியாசைக் கொல்லவும், அவர் உடமைகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்யவும் கட்டளையிட்டான்.
23 எல்லாவற்றையும் பறிக்கொடுத்த தொபியாசோ, தம் மகனோடும் மனைவியோடும் தப்பியோடி தமக்கு அன்பு காட்டிவந்த பலரின் துணை கொண்டு மறைந்த வாழ்வு நடத்தி வந்தார்.
24 அரசனோ நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் தன் சொந்த மக்களாலேயே கொலை செய்யப்பட்டான்.
25 அப்பொழுது தொபியாசு தம் வீடு திரும்பினார். அவர் உடைமைகள் அனைத்தும் அவருக்குத் திரும்பித் தரப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், வந்தார், தொபியாசு, அரசன், ஏற்பாடு, பழைய, விட்டு, எல்லாவற்றையும், இஸ்ராயேல், கொடுத்து, ஆகமம், மேல், நெப்தலி, கடவுள், கொண்டு, செய்யவும், அங்கே, கூறி, வருவார், பிறகு, கொலை, அவன், தமக்கு, சென்னாக்கெரிப், மகனோடும், தொபியாசோ, செய்து, வாழ்ந்து, நகருக்கு, குலத்தினரான, ஆன்மிகம், திருவிவிலியம், சிறைப்படுத்தப்பட்டு, அனைவரும், போது, வந்த, பத்தில், வழிபட்டு, மனைவியோடும்