யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 28
2 இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது, செம்பு கல்லிருந்து உருக்கியெடுக்கப்படுகிறது.
3 இருளையும் மனிதர்கள் ஓட்டி விட்டு, எட்டின மட்டும் மண்ணில் வெட்டிச் சென்று இருட்டிலும் காரிருளிலும் உலோகங்களைத் தேடுகின்றார்கள்.
4 மனிதர்கள் வாழுமிடத்திற்குத் தொலைவிலுள்ள பள்ளத்தாக்குகளில் சுரங்கங்கள் தோண்டுகிறார்கள்@ மேலே நடமாடுவோர் அவர்களை நினைக்க மாட்டார்கள், மனிதரில்லா இடத்தில் கயிறு கட்டி இறங்கிப் பாறைகளில் வேலை செய்கிறார்கள்.
5 மேலே உணவுப் பொருட்கள் விளைகின்ற அந்த நிலத்திலோ கீழே நெருப்பினால் கொதித்துக் கொண்டிருக்கின்றது.
6 அதன் கற்களில் நீலமணிகள் கிடைக்கின்றன, அதிலே பொன் தூளும் அகப்படுகிறது.
7 ஆங்குப் போகும் வழி பறவைகளுக்குத் தெரியாது, கழுகின் கண் கூட அதைக் கண்டதில்லை.
8 செருக்குற்ற மிருகங்கள் அதன்மேல் நடந்ததில்லை, சிங்கமும் அவ்வழியில் சென்றதில்லை.
9 கடின பாறைகளிலும் மனிதன் தன் கையை வைக்கிறான், மலைகளையும் வேரொடு புரட்டி விடுகிறான்.
10 பாறைகளில் சுரங்க வழிகளைக் குடைகின்றான், விலையுயர்ந்த பொருள்களை அவன் கண் தேடுகிறது.
11 ஆற்றின் ஊற்றுகளையும் ஆய்ந்து பரிசோதிக்கிறான், மறைந்திருந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறான்.
12 ஆனால் ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் இருப்பிடம் எங்கே உள்ளது?
13 அதை அடையும் வழியை மனிதன் அறியான். வாழ்பவர்களின் உலகத்தில் அது கிடைக்காது.
14 என்னிடம் இல்லை~ என்று பாதாளம் சொல்லுகிறது, ~என்னிடத்தில் கிடைக்காது~ என்று கடல் கூறுகிறது.
15 பொன் கொடுத்து அதை வாங்க முடியாது, வெள்ளியை அதன் விலையாய் நிறுத்துத் தர முடியாது.
16 ஒப்பீரின் தங்கமும் அதற்கு ஈடாகாது, விலையுயர்ந்த கோமேதகமும் நீலமணியும் அதற்கு விலையாகாது.
17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகரல்ல, பசும்பொன் நகைகளுக்கும் அதை மாற்ற முடியாது.
18 பவளமும் படிகமும் அதற்கு ஒப்பாகாது, ஞானத்தின் விலை முத்துக்களினும் உயர்ந்தது.
19 எத்தியோப்பியாவின் பஷ்பராகம் அதற்கு இணையாகாது, பத்தரை மாற்றுத் தங்கத்தாலும் அதை விலைமதிக்க முடியாது.
20 பின்னர், ஞானம் எங்கிருந்து வருகிறது? அறிவின் இருப்பிடம் எங்கே உள்ளது?
21 வாழ்வோர் அனைவரின் கண்ணுக்கும் அது மறைவாயுள்ளது, வானத்துப் பறவைகளுக்கும் மறைந்துள்ளது.
22 கீழுலகமும், சாவும், ~அதைப்பற்றிய வதந்தி எங்கள் காதுகளில் விழுந்தது~ என்கின்றன.
23 அதற்குச் செல்லும் வழியைக் கடவுள் அறிவார், அது இருக்குமிடம் அவருக்குத் தெரியும்.
24 ஏனெனில் அவர் பார்வை மண்ணுலகின் எல்லை வரை எட்டுகிறது, வானத்தின் கீழுள்ள அனைத்தையும் அவர் காண்கிறார்.
25 காற்றுக்கு அதன் எடையை அவர் தந்த போது, தண்ணீரை முகந்து அளந்த போது, மழைக்குக் கட்டளை கொடுத்த போது,
26 இடி மின்னலுக்கு வழியை வகுத்த போது,
27 அவர் ஞானத்தைக் கண்டார், கண்டு அறிவித்தார்@ அதை நிலை நாட்டினார், ஆய்ந்தறிந்தார்.
28 அதன்பின் அவர் மனிதனை நோக்கி, ~இதோ ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானம், தீமையை விட்டு விலகுவதே அறிவு~ என்றார்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், ஏற்பாடு, அதற்கு, பழைய, போது, முடியாது, ஞானம், எங்கே, யோபு, ஆகமம், அறிவின், வழியை, உள்ளது, இருப்பிடம், மனிதன், மனிதர்கள், ஆன்மிகம், திருவிவிலியம், விட்டு, மேலே, பொன், பாறைகளில், விலையுயர்ந்த