எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 15
2 மனிதா, காட்டிலுள்ள மற்றெல்லாச் செடிகளையும் விடத் திராட்சைக் கொடி மட்டும் எவ்வகையில் சிறந்தது?
3 அதிலிருந்து வேலைப்பாட்டுக்கென மரம் எடுக்கப்படுகிறதா? எதேனும் சாமானை மாட்டித் தொங்க விடும் முளையேனும் அதனால் செய்ய முடியுமா?
4 இதோ, நெருப்புக்கிரையாக அது போடப்படும்@ அதன் இரு முனைகளும் சுட்டெரிக்கப்பட்ட பின், அதன் நடுத்தண்டு வெந்து சாம்பலான பின், அது எதற்காவது பயன்படுமா?
5 அது நெருப்புக்கிரையாகு முன்பே ஒன்றுக்கும் பயன்படவில்லை! நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டு, வெந்து சாம்பலான பிறகுதானா பயன்படப் போகிறது?
6 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: காட்டு மரங்களுக்குள்ளே ஒன்றான திராட்சைக் கொடியை நெருப்புக்கு இரையாக நாம் போட்டது போல, யெருசலேம் மக்களையும் தீக்கிரையாக்குவோம்.
7 நமது முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவோம்@ அவர்கள் நெருப்பிலிருந்து தப்பித்தாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்காமல் விடாது. நாம் நமது முகத்தை அவர்களுக்கு எதிராய்த் திருப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8 அவர்களின் நாட்டை நாம் பாழாக்குவோம், ஏனெனில், அவர்கள் நமக்குத் துரோகம் செய்தார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, நாம், ஆகமம், எசேக்கியேல், இறைவன், அவர்களுக்கு, ஆண்டவராகிய, முகத்தை, நமது, பின், திருவிவிலியம், ஆன்மிகம், திராட்சைக், வெந்து, சாம்பலான