ஆமோஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 அவர் கூறினார்: "சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கிறார், யெருசலேமிலிருந்து தம் குரலை எழுப்புகிறார்@ இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் புலம்புகின்றன, கர்மேலின் கொடுமுடி உலர்கின்றது. "
3 ஆண்டவர் கூறுவது இதுவே: "தமஸ்கு நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்@ அவர்கள் கலகாத்தை இருப்புருளையில் வைத்து ஆட்டினார்கள்.
4 ஆதலால் அசாயேல் வீட்டின் மேல் தீயனுப்புவோம், அது பெனாதாத்தின் அரண்மனைகளை அழித்து விடும்.
5 தமஸ்கின் தாழ்ப்பாளை முறித்திடுவோம்@ பிக்காத்- ஆவேனில் அரியணை வீற்றிருப்பவனையும், பேத்தேதேனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்@ சீரியா நாட்டினர் கீருக்கு நாடுகடத்தப் படுவர்" என்கிறார் ஆண்டவர்.
6 ஆண்டவர் கூறுவது இதுவே: "காசா பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்ற மாட்டோம்@ அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கூட்டிப் போனார்கள்.
7 ஆதலால் காசாவின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்@
8 ஆசோத்தில் வாழும் குடிமக்களையும், அஸ்கலோனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்@ அக்காரோன் மீது நம் கரத்தைத் திருப்புவோம், பிலிஸ்தியருள் எஞ்சினோரும் அழிந்திடுவர்" என்கிறார் ஆண்டவர்.
9 ஆண்டவர் கூறுவது இதுவே: "தீர் நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்றமாட்டோம்@ அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள், சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைக்கவே இல்லை.
10 ஆதலால் தீரின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம்@ அது அதனுடைய அரண்மனைகளை அழித்துவிடும்."
11 ஆண்டவர் கூறுவது இதுவே: "ஏதோம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்றமாட்டோம்@ இரக்கம் கொஞ்சமும் காட்டாமல் தன் சகோதரனையே வாளால் துன்புறுத்தினான்@ தன் ஆத்திரத்தை அவன் அடக்கி வையாமல் என்றென்றும் தன் கோபத்தைக் காட்டி வந்தான்.
12 ஆதலால் தேமான் மேல் நாம் தீயனுப்புவோம், அது போஸ்ராவின் அரண்மனைகளை அழித்துவிடும்."
13 ஆண்டவர் கூறுவது இதுவே: "அம்மோன் மக்கள் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்@ தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக, கலகாத்தின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழித்தனர்@
14 ஆதலால் ராபாவின் கோட்டை மதிலில் தீ மூட்டுவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்@ போர் தொடுக்கும் நாளிலே பேரிரைச்சலும், சூறாவளி நாளிலே கடும்புயலும் இருக்கும்!
15 அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான், தலைவர்களும் அவனோடு கொண்டு போகப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆமோஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, மேல், ", ஆண்டவர், நாம், பழிச்செயலுக்கு, பழிச்செயல், செய்ததற்காக, ஆதலால், தண்டனைத், இட்ட, இதுவே, கூறுவது, ஏற்பாடு, அரண்மனைகளை, ஆமோஸ், பழைய, அதனுடைய, என்கிறார், மாட்டோம்@, அழித்து, தீயனுப்புவோம், கோட்டை, மாற்ற, ஆகமம், தீர்ப்பை, மதில், அடிமைகளாகக், திருவிவிலியம், விடும்@, கொண்டு, நாளிலே, அழித்துவிடும், மாற்றமாட்டோம்@, ஏதோமுக்கு, முழுவதையுமே, அரசனாகிய, காலத்திலும், நகரம், செங்கோல், தாங்கியிருப்பவனையும், தீர்பை, ஆன்மிகம், ஒழிப்போம்@, மக்களினம்