பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை:। பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை:॥ 11.26 ॥ வக்த்ராணி தே த்வரமாணா விஷந்தி தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி। கேசித்விலக்நா தஷநாந்தரேஷு ஸம்த்ருஷ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை:॥ 11.27 ॥ |
இதோ திருதராஷ்டிரரின் பிள்ளைகள், மன்னர்கள் கூட்டம், பீஷ்மர், துரோணர், கர்ணன், நம்மவர்களுள் முக்கிய வீரர்கள் என்று அனைவரும் பயங்கரமான வளைந்த பற்கள் உடைய உனது வாய்களில் பரபரப்பாக புகுகிறார்கள். சிலர் தூளாக்கப்பட்ட தலைகளுடன் பல் இடுக்குகளில் அகப்பட்டு கிடக்கிறார்கள் .
யதா நதீநாம் பஹவோ அம்புவேகா:
ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி। ததா தவாமீ நரலோகவீரா விஷந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி॥ 11.28 ॥ |
நதிகளின் வேகம் மிக்க பல பிரவாகங்கள் எவ்வாறு கடலை நோக்கி பாய்கின்றனவோ, அவ்வாறே இந்த வீரர்களும் எங்கும் பிரகாசித்து கொண்டிருக்கின்ற உனது வாய்களில் புகுகிறார்கள்.
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா
விஷந்தி நாஷாய ஸம்ருத்தவேகா:। ததைவ நாஷாய விஷந்தி லோகா: தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா:॥ 11.29 ॥ |
விட்டிற்பூச்சிகள் அழிவதர்க்காக எவ்வாறு, சுடர் விட்டெரியும் தீயில் வெகு வேகமாக பாய்கின்றனவோ அவ்வாறே இந்த மனிதர்களும் அழிவதற்க்காகவே உனது வாய்களுள் மிகுந்த வேகத்துடன் புகுகிறார்கள்.
லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தாத்
லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி:। தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ॥ 11.30 ॥ |
திருமாலே ! சூழ்ந்துள்ள எல்லா உலகங்களையும் பிரகாசிக்கின்ற வாய்களால் விழுங்கி ருசி பார்கிறாய் நீ. உனது உக்கிரமான ஒளி எல்லா உலகையும் பிரகாசத்தால் நிரப்பியபடி எரிகிறது.
ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ
நமோ அஸ்து தே தேவவர ப்ரஸீத। விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்॥ 11.31 ॥ |
பயங்கர உருவுடைய நீ யார் என்று எனக்கு சொல்வாய். உன்னை வணங்குகிறேன். உனது செயல்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. தேவர் தலைவா ! அருள் புரிக. முதல்வனாகிய உன்னை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, உனது, பகவத்கீதை, விஷந்தி, பதினொன்றாவது, யோகம், புகுகிறார்கள், ஸ்ரீமத், அத்தியாயம், விஷ்வரூபதர்ஷந, நாஷாய, அவ்வாறே, ஸம்ருத்தவேகா, எல்லா, உன்னை, பாய்கின்றனவோ, எவ்வாறு, வக்த்ராணி, gita, வாய்களில், bhagavad, இந்து