ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்। கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம்॥ 9.7 ॥ |
அர்ஜுனா ! கல்ப முடிவில் எல்லா உயிர்களும் என் சக்தியில் ஒடுங்குகின்றன. கல்ப ஆரம்பத்தில் மீண்டும் அவற்றை நான் தோற்றுவிக்கிறேன்.
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந:। பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஷம் ப்ரக்ருதேர்வஷாத்॥ 9.8 ॥ |
என் சக்தியை பரிணமிக்க செய்து, தன் வசமில்லாமல் எனது சக்தியின் வசத்தில் இருக்கின்ற எல்லா உயிரினங்களையும் மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கிறேன்.
ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநம்ஜய। உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு॥ 9.9 ॥ |
அர்ஜுனா ! கர்மங்களில் பற்றற்றவனாகவும், பொருட்படுத்தாதவனை போலவும் இருக்கின்ற என்னை அந்த கர்மங்கள் கட்டுபடுத்துவது இல்லை.
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்। ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே॥ 9.10 ॥ |
அர்ஜுனா ! என்னால் வழிநடத்தபெற்று, எனது அந்த சக்தி, அசைவதும், அசையாததும் நிறைந்த உலகை படைக்கிறது, இவ்வாறு உலகம் செயல்படுகிறது .
அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஷ்ரிதம்। பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஷ்வரம்॥ 9.11 ॥ |
உயிர்களின் தலைவனான எனது மேலான இயல்பை அறியாத மூடர்கள் மனித உடலை எடுத்துள்ளவன் என்று என்னை அவமதிக்கிறார்கள்.
மோகாஷா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ:। ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஷ்ரிதா:॥ 9.12 ॥ |
அசுரர் மற்றும் அரக்கர்களின் இயல்புகளான மனமயக்கமும் விவேகமின்மையும் நிறைந்த இந்த கோணல் அறிவினர் நம்பிக்கைகள் வீண், செயல்களும் வீணே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், ஒன்பதாவது, மீண்டும், எனது, அர்ஜுனா, ப்ரக்ருதிம், அத்தியாயம், யோகம், ராஜவித்யாராஜகுஹ்ய, மாம், இருக்கின்ற, என்னை, அந்த, நிறைந்த, இந்து, தோற்றுவிக்கிறேன், கௌந்தேய, கல்ப, எல்லா, gita, bhagavad