பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அதாஷ்டாதஷோ அத்யாய:। மோட்ச சன்யாஸ யோகம்(கடமை மூலம் கடவுள்) |
அர்ஜுன உவாச। |
ஸம்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்। த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ ப்ருதக்கேஷிநிஷூதந॥ 18.1 ॥ |
அர்ஜுனன் கூறினான்: தோள்வலிமை மிக்கவனே ! கிருஷ்ணா ! கேசி என்ற அசுரனை கொன்றவனே ! சன்னியாசம், தியாகம் இரண்டின் உட்பொருளையும் தனித்தனியாக அறிய விரும்புகிறேன்.
ஸ்ரீபகவாநுவாச। |
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸம் கவயோ விது:। ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:॥ 18.2 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: ஆசை வசப்பட்டு செய்கின்ற செயல்களை விடுவது சன்னியாசம் என்று மகான்கள் அறிகிறார்கள். செயல்களின் பலனை விட்டுவிடுவது தியாகம் என்று தீர்க்கதரிசிகள் சொல்கிறார்கள்.
த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:। யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே॥ 18.3 ॥ |
எல்லா செயல்களும் குற்றம் உடையவை. எனவே எல்லாம் துறக்கபட வேண்டியவை என்று ஒருசிலர் கூறுகின்றனர். வழிபாடு, தானம், தவம் போன்றவற்றவை துறக்ககூடாது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நிஷ்சயம் ஷ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம। த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:॥ 18.4 ॥ |
பரதகுலத்தில் சிறந்தவனே ! தியாக விஷயத்தில் எனது உறுதியான கருத்தை கேள். ஆண்களில் புலி போன்றவனே ! தியாகம் மூன்று விதம் என்று கூறப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், சன்யாஸ, பகவத்கீதை, மோட்ச, தியாகம், பதினெட்டாவது, ஸ்ரீமத், அத்தியாயம், கர்ம, கூறுகின்றனர், சன்னியாசம், ஸ்ரீ, bhagavad, இந்து, gita