ஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத பம்சமோ அத்ய:। கர்ம சன்யாச யோகம்(ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்பாடு) |
அர்ஜுன உவாச। |
ஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஷம்ஸஸி। யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஷ்சிதம்॥ 5.1 ॥ |
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! செயல்களை விடுவது பற்றியும் சொல்கிறாய், அதே வேளையில் கர்மயோகம் செய்வது பற்றியும் சொல்கிறாய். இவற்றுள் எது சிறந்தது என்று எனக்கு நன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளதோ அந்த ஒன்று எனக்கு சொல்வாய்.
ஸ்ரீபகவாநுவாச। |
ஸம்ந்யாஸ: கர்மயோகஷ்ச நி:ஷ்ரேயஸகராவுபௌ। தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே॥ 5.2 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: செயல்களை விடுவது, கர்மயோகத்தில் ஈடுபடுவது ஆகிய இரண்டும் உயர்ந்த பலனை அளிப்பவை தான். அவற்றுள் செயல்களை விடுவதை விட கர்மயோகம் சிறந்தது.
ஜ்ஞேய: ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி। நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே॥ 5.3 ॥ |
பெருந்தோள் உடையவனே ! யார் வெறுப்பதும் விரும்புவதும் இல்லையோ அவனே மிக உயர்ந்த துறவி. ஏனெனில் இருமைகள் அற்றவன் பந்தத்திலிருந்து எளிதில் விடுபடுகிறான்.
ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:। ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்॥ 5.4 ॥ |
செயல்களை விடுவது, செயல்களில் ஈடுபடுவது இரண்டும் வெவ்வேறானவை என்று பக்குவம் பெறாதவர்கள் பேசுகிறார்கள். அறிவாளிகள் அவ்வாறு பேசுவது இல்லை. இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் உரிய முறையில் கடைபிடித்தவன் இரண்டையும் பின்பற்றிய பலனை அடைகிறான்.
யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே। ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 5.5 ॥ |
செயலை விடுபவர்கள் அடைகின்ற நிலையை கர்மயோகிகளும் அடைகிறார்கள். செயலை விடுவது, செயலில் ஈடுபடுவது இரண்டையும் ஒன்றாக யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.
ஸம்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:। யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி॥ 5.6 ॥ |
பெருந்தோள் உடையவனே ! செயல்களில் ஈடுபடாமல் செயல்களை விடுகின்ற நிலையை அடைவது கடினமானது. செயல்களில் ஈடுபடுகின்ற சாதகன் விரைவில் இறைவனை அடைகின்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், செயல்களை, பகவத்கீதை, சன்யாச, விடுவது, கர்ம, ஸ்ரீமத், செயல்களில், ஈடுபடுவது, அத்தியாயம், ஐந்தாவது, உடையவனே, மஹாபாஹோ, பெருந்தோள், இரண்டையும், நிலையை, செயலை, பலனை, அவனே, யார், கர்மயோகம், ஸ்ரீ, இந்து, gita, bhagavad, பற்றியும், சொல்கிறாய், இரண்டும், எனக்கு, சிறந்தது, உயர்ந்த