பதினான்காவது அத்தியாயம் (குணத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:। நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்॥ 14.5 ॥ |
பெரிய தோள்களை உடையவனே ! மாயையிலிருந்து தோன்றிய சத்வம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களும் அழிவற்றவனான மனிதனை உடம்பில் பிணைக்கிறது.
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஷகமநாமயம்। ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக॥ 14.6 ॥ |
பாவமற்றவனே ! அவற்றுள் சத்வ குணம் களங்கம் இல்லாததால் ஒளி பொருந்தியது. கேடற்றது. சுகம் மற்றும் ஞானத்தின் மீதுள்ள பற்றின் வாயிலாக அது மனிதனை பிணைக்கிறது.
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்। தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்॥ 14.7 ॥ |
குந்தியின் மகனே ! ரஜோ குணம் ஆசை வடிவானது. வேட்கையையும் பற்றையும் உண்டாக்குவது என்று அறிந்துகொள், செயல் மீது கொள்கின்ற பற்றுதலால் அது மனிதனை கட்டுகிறது.
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்। ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத॥ 14.8 ॥ |
அர்ஜுனா ! தமோ குணமோ அறியாமையில் பிறந்தது. எல்லோருக்கும் மனமயக்கம் தருவது என்று அறிந்துகொள். அது கவனமின்மை, சோம்பல், தூக்கம் ஆகியவற்றால் மனிதனை கட்டுகிறது.
ஸத்த்வம் ஸுகே ஸம்ஜயதி ரஜ: கர்மணி பாரத। ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸம்ஜயத்யுத॥ 14.9 ॥ |
அர்ஜுனா ! சத்வ குணம் சுகத்தில் இணைக்கிறது, ரஜோ குணம் செயலில் இணைக்கிறது, தமோ குணமோ ஞானத்தை மறைத்து கவனமின்மையில் இணைக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினான்காவது அத்தியாயம் (குணத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, மனிதனை, பகவத்கீதை, குணம், ஸ்ரீமத், பதினான்காவது, இணைக்கிறது, ஸத்த்வம், அத்தியாயம், யோகம், குணத்ரயவிபாக, கட்டுகிறது, அர்ஜுனா, குணமோ, இந்து, அறிந்துகொள், வித்தி, பிணைக்கிறது, சத்வ, gita, bhagavad