ஆறாவது அத்தியாயம் (ஆத்ம ஸம்யம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத ஷஷ்டோ அத்யாய:। ஆத்ம ஸம்யம யோகம்(மனத்தை வசபடுத்து) |
ஸ்ரீபகவாநுவாச। |
அநாஷ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய:। ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய:॥ 6.1 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: செய்ய வேண்டிய செயல்களை யார் கர்மபலனை எதிர்பாராமல் செய்கிறானோ அவனே துறவி, அவனே யோகி, அக்னி சம்பந்தமான கிரியைகள் செய்யாதவனோ, செயல்களில் ஈடுபடாதவனோ இல்லை .
யம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ। ந ஹ்யஸம்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந॥ 6.2 ॥ |
அர்ஜுனா ! எதை துறவு என்று சொல்கிறார்களோ அதை யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை விடாத யாரும் யோகி ஆவதில்லை.
ஆருருக்ஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே। யோகாரூடஸ்ய தஸ்யைவ ஷம: காரணமுச்யதே॥ 6.3 ॥ |
தியான யோகத்தை நாடுகின்ற முனிவனுக்கு செயல்கள் வழி என்று சொல்லபடுகிறது. அவனே தியான யோக நிலையை அடைந்து விட்டால் செயலின்மை வழியாக அமைகிறது.
யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே। ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே॥ 6.4 ॥ |
எப்போது புலன்கள் நாடுகின்ற பொருட்களில் ஒருவன் ஆசை வைப்பதில்லையோ , செயலில் பற்று வைப்பதில்லையோ, எல்லா நுண்நிலை ஆசைகளையும் விட்டுவிடுகின்ற அவன் தியானயோக நிலையை அடைந்து விட்டவன்.
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்। ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥ 6.5 ॥ |
உன்னை உன்னாலேயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்தாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன்.
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:। அநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத்॥ 6.6 ॥ |
தன்னை வென்றவன் தனக்கு நண்பன் , தன்னை வெல்லாதவன் தனக்கு தானே பகைவன் போல் பகைமையில் இருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாவது அத்தியாயம் (ஆத்ம ஸம்யம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், ஸம்யம, ஆத்ம, பகவத்கீதை, ஸ்ரீமத், ஆறாவது, அவனே, அத்தியாயம், நீயே, உன்னை, வைப்பதில்லையோ, உனக்கு, நண்பன், தனக்கு, தன்னை, பகைவன், அடைந்து, நாடுகின்ற, ஸ்ரீ, இந்து, bhagavad, கர்ம, யோகீ, gita, தியான, யோகி, நிலையை