முதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥ ॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥ அத ப்ரதமோத்யாய அர்ஜுன விஷாத யோகம்(குழப்பமும் கலக்கமும்) |
த்ருதராஷ்ட்ர உவாச |
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:। மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥ |
திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்சயா ! தர்மபூமியாகிய குருக்ஷேத்திரத்தில் போர் செய்வதற்காக கூடி நின்ற என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்.
ஸம்ஜய உவாச। |
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா। ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்து விட்டு அரசனாகிய துரியோதனன் ஆச்சார்ய துரோணரை அணுகி கூறினான்.
பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்। வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥ |
ஆசாரியரே ! உமது சீடனும் புத்திசாலியும் துருபதனின் மகனுமான த்ருஷ்டயும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் பெரிய படையை பாருங்கள்.
அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி। யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥ த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்। புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥ யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்। ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥ |
சாத்யகி, விராடமன்னன், மகாரதனான துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், பலசாலியான காசி மன்னன், புருஜித், குந்தி போஜன், மனிதருள் சிறந்தவனான சிபியின் வம்சத்தில் வந்த மன்னன், பராகிரமசாலியான யுதாமன்யு, பலசாலியான உத்தமௌஜன், அபிமன்யு ,திரௌபதியின் பிள்ளைகள் என்று பீமணுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான பெரிய வில் வீரர்கள் பலர் பாண்டவர் படையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாரதர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, ஸ்ரீமத், யோகம், விஷாத, பகவத்கீதை, அர்ஜுன, அத்தியாயம், படையை, வீர்யவாந்&, பெரிய, பலசாலியான, மன்னன், பாண்டவர், இந்து, bhagavad, gita, ஸம்ஜய, கூறினார், நின்ற